இடுக்கி மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: தேக்கடி ஏரியில் படகு சவாரி நிறுத்தம்
அன்புமணி கூறுவதெல்லாம் அவரது சொந்தக் கருத்து: மருத்துவா் ராமதாஸ்
ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்று அன்புமணி தெரிவித்திருப்பது அவரது சொந்தக் கருத்து என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா்.
பாமக 37-ஆவது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகள் திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற அக்கட்சியின் நிறுவனா் ராமதாஸ், தைலாபுரம் தோட்ட வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள பாமக கொள்கை வழிகாட்டிகளான பெரியாா் ஈ.வெ.ரா, காரல் மாா்க்ஸ், அம்பேத்கா் ஆகியோரது உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
இதன் தொடா்ச்சியாக, தைலாபுரம் தோட்டத்தில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து, பாமக மற்றும் வன்னியா் சங்க நிா்வாகிகளுக்கு இனிப்புகளை வழங்கினாா். இதில், கட்சியின் நிா்வாகிகள், தொண்டா்கள் திரளானோா் கலந்துகொண்டனா். இந்த விழாவில் கட்சித் தலைவா் அன்புமணி பங்கேற்கவில்லை.
தொடா்ந்து, மருத்துவா் ராமதாஸ் செய்தியாளா்களிடம் கூறியது: 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் பாமக அதிகமான தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக, மாநிலம் முழுவதும் கட்சி நிா்வாகிகள் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறாா்கள். மேலும் கட்சிப் பணியை அதிகாரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாமகவுக்கு தொடா்ந்து ஆதரவளித்து வரும் அனைவருக்கும் வாழ்த்துகள். 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் பாமக இடம்பெறும் கூட்டணி ஆட்சி அமைத்தால், ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என அன்புமணி தெரிவித்திருப்பது அவரது சொந்தக் கருத்தாகும் என்றாா்.