சென்னைக்கு அலர்ட்! 11 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!
குண்டா் தடுப்புக்காவலில் இளைஞா் கைது
விழுப்புரம் மாவட்டம், ரோஷணை காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
ரோஷணை காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆனந்தராசன் தலைமையிலான போலீஸாா், கடந்த ஜூன் 14-ஆம் தேதி அப்பகுதியிலுள்ள முருகன் கோயில் அருகே ரோந்து சென்றனா்.
அப்போது கோயிலின் பின்புறத்தில் மது விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ரோஷணை மருத்துவமனை வீதியைச் சோ்ந்த சரண்ராஜ் (எ) கிடங்கலான் (25), மறைத்து வைத்திருந்த கத்தியால் காவல் உதவி ஆய்வாளா் ஆனந்தராசனைக் கொலை செய்ய முயன்றாராம்.
இதுகுறித்து ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிந்து சரண்ராஜை கைது செய்தனா். தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட எஸ்.பி. ப.சரவணன் பரிந்துரைத்தாா். இதையேற்று அதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் பிறப்பித்தாா்.
இதையடுத்து குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சரண்ராஜ் கைது செய்யப்பட்டு, கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.