செய்திகள் :

மருத்துவக் கலந்தாய்வு ஜூலை 30-ல் தொடக்கம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

post image

தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு வரும் ஜூலை 30 ஆம் தேதி தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15 சதவீதம் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த இடங்கள் மற்றும் எய்ம்ஸ், ஜிப்மர், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின்( டிஜிஹெச்எஸ்) மருத்துவக் கலந்தாய்வுக் குழு (எம்சிசி) இணையவழியே நடத்தி வருகிறது.

நிகழாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 21-ஆம் தேதி தொடங்குகிறது. மாநில கலந்தாய்வைப் பொருத்தவரை தோராயமாக ஜூலை 30-ஆம் தேதி நடத்த வேண்டும் என்று மத்திய சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் தெரிவித்திருந்தது.

இது குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறுகையில், தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 30 ஆம் தேதி தொடங்கப்படுகிறது. இளங்கலை எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வுக்கு 72,743 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. போலிச் சான்றிதழ் கொடுத்த 20 பேரின் விண்ணப்பங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளன” என்றார்.

தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி என 5,200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அவற்றில் 888 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது.

தவிர சுயநிதிக் கல்லூரிகளில் 3,450 இடங்கள், தனியாா் மருத்துவப் பல்கலைக்கழகங்களில் 550 இடங்கள் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கு உள்ளன. மொத்தமாக அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 9,200 எம்பிபிஎஸ் இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

இதில் 496 இடங்கள் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படுகிறது.

பிடிஎஸ் இடங்களைப் பொருத்தவரை அரசு மருத்துவக் கல்லூரிகளில் 250 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 1,900 இடங்களும் உள்ளன. இவற்றில், 126 இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: மயிலாடுதுறை மாவட்டத்துக்கு முதல்வரின் 8 புதிய அறிவிப்புகள்!

Counseling for medical courses in Tamil Nadu will begin on July 30, Public Health Minister M. Subramanian has said.

நெல்லை ராமையன்பட்டி குப்பைக் கிடங்கில் தீ! சாலைகளைப் பயன்படுத்தத் தடை!

திருநெல்வேலி ராமையன்பட்டி குப்பைக் கிடங்கில் ஏற்பட்டுள்ள தீயைக் கட்டுப்பட்டுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருவதால் அப்பகுதியில் உள்ள சாலைகளைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.திருநெல்வேல... மேலும் பார்க்க

காமராஜர் மீது காங்கிரஸுக்கும் தீராக் காழ்ப்பு! திருச்சி சிவா பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

முன்னாள் முதல்வர் காமராஜருக்காக அனைத்து அரசு பயணியர் விடுதியிலும் குளிர்சாதன வசதியை கருணாநிதி கொண்டு வந்ததாகவும், நாட்டையும் ஜனநாயகத்தையும் கருணாநிதிதான் காப்பாற்ற வேண்டுமென்றும் காமராஜர் கோரியதாக திம... மேலும் பார்க்க

யோகா - இயற்கை மருத்துவப் படிப்பு: விண்ணப்பிப்பது எப்படி?

பி.என்.ஒய்.எஸ். (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆனணயரகம் வெளியிட்டுள்ளது.இது குறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஓ... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி தேர்வில் விடியல் பயணம் கேள்வி: சீமான் விமர்சனம்!

டிஎன்பிஎஸ்சி தேர்வில் விடியல் பயணம் குறித்து கேட்கப்பட்டு கேள்விக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.கடந்த 2018 ஆம் ஆண்டு திருச்சி விமான நிலையத்தில் மதிமுகவினருக்கும் ,... மேலும் பார்க்க

மோடிக்கு கறுப்பு பலூன் காட்டிய ஸ்டாலின் வெள்ளைக் குடை பிடிக்கிறார்! இபிஎஸ் விமர்சனம்

பாஜகவிடம் அதிமுகவுக்கு பயம் என்று அதிமுகவை முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.சிதம்பரத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பழனிசாமி பிரச... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று(ஜூலை 17) தமிழகத்தில் ஓரிரு இ... மேலும் பார்க்க