Chiyaan 64: மெய்யழகன் பட இயக்குநருடன் இணைந்த சியான் விக்ரம்; அடுத்த படம் குறித்த அப்டேட் இதோ!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விக்ரமின் 64வது திரைப்படத்தை, ‘96’ மற்றும் ‘மெய்யழகன்’ படங்களின் இயக்குநர் பிரேம் குமார் இயக்கவுள்ளார். இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.
‘96’ படத்தின் மூலம் உணர்வுப்பூர்வமான கதைசொல்லலால் ரசிகர்களை கவர்ந்த பிரேம் குமார், சமீபத்தில் வெளியான ‘மெய்யழகன்’ படத்தின் வெற்றியால் மேலும் புகழ் பெற்றவர்.
தற்போது விக்ரமுடன் இணைந்து பணியாற்றவுள்ளார் பிரேம் குமார்.

'96' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதற்கு முன்பு, அவர் விக்ரமுடன் இந்த படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.