செய்திகள் :

Ooty : 75 ரகங்களில் 2 லட்சம் மலர் நாற்றுகள்; 2 -ம் சீசனுக்கு தயாராகும் சிம்ஸ் பூங்கா!

post image

சுற்றுலா சிறப்பு வாய்ந்த நீலகிரியில் கோடை சீசன் நிறைவடைந்திருக்கிறது. ஏப்ரல், மற்றும் மே மாதங்களில் மட்டும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் நீலகிரியைக் கண்டு ரசித்துச் சென்ற நிலையில், தற்போதும் சுற்றுலா பயணிகளின் வருகை கணிசமாக காணப்படுகிறது.

மலர் நாற்று நடவு

தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத்துறை மூலம் பராமரிக்கப்படும் பூங்காக்களில் மே மாதம் முழுவதும் கோடை திருவிழாக்கள் நடைபெற்று வந்த நிலையில், இரண்டாம் கட்ட சீசனுக்கு பூங்காக்களை தயார் செய்யும் பயணிகளை தொடங்கியிருக்கிறார்கள். இதன் ஒரு பகுதியாக நூற்றாண்டு பழைமை வாய்ந்த குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுமார் 2 லட்சம் மலர் நாற்றுகளை நடவு செய்யும் பணிகளை தொடங்கியிருக்கிறார்கள்.

இது குறித்து தெரிவித்த தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், " கோடை சீசனைத் தொடர்ந்து அக்டோபர் முதல் நவம்பர் வரை நீலகிரியில் இரண்டாவது சீசன் நடத்தப்படுகிறது. ஜூலை மாதமே அதற்கான ஏற்பாடுகள் தொடங்கும். அமெரிக்கா, ஜப்பான், ஃபிரான்ஸ்,

மலர் நாற்று நடவு

நெதர்லாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளை தாயகமாகக் கொண்ட சால்வியா, ஜென்னியா, டேலியா, பிகோனியா, ஃபேன்சி , டெல்ஃபினியம், பெட்டுனியா, லிசியான்தஸ் உள்ளிட்ட 75 ரகங்களில் சுமார் 2 லட்சம் மலர் நாற்றுகளை நடவு செய்யும் பணிகள் தொடங்கியிருக்கிறது. இரண்டாம் சீசனுக்கு வருகைத் தரும் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு லட்சக்கணக்கான மலர்கள் விருந்து படைக்கும் " என்றனர்.

Retro நாயகிகள் 10: சோகமான கேரக்டர்கள்ல தான் நடிப்பேனா; எனக்கு கிளாமர் வராதா? - நடிகை ஷோபா பர்சனல்ஸ்

தமிழ் சினிமா எத்தனையோ பேரழகிகளை, நடிப்பில் உச்சம்தொட்ட திறமையான நடிகைகளைப் பார்த்திருக்கு. அதுல 70-கள்ல, தன்னோட நடிப்பால அசர வெச்ச, பல சீனியர் ஆர்ட்டிஸ்ட்களாலும் 'மகளே', 'மோளே'ன்னு கொண்டாடப்பட்ட நடிகை... மேலும் பார்க்க

தோழியை திருமணம் செய்து ரீல்ஸ் வெளியிட்ட நடிகை - உண்மை வெளிப்பட்டதால் கண்டித்த ரசிகர்கள்!

மலையாள சின்னத்திரையில் 'கூடெவிடே' என்ற சீரியல் மூலம் பிரபலம் ஆனவர் நடிகை பிரார்த்தனா. இவரது தோழி ஆன்ஸி. ஆன்ஸி மாடலாக உள்ளார். சில நாட்களுக்கு முன் நடிகை பிரார்த்தனாவும், ஆன்ஸியும் ஒரு கோயிலில் வைத்து ... மேலும் பார்க்க

``வாழ்நாள் முழுவதுமான சினிமாவின் முதல்படி..'' - நடிகையாகும் மகள் விஸ்மயாவுக்கு மோகன்லால் வாழ்த்து!

மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ் சினிமாக்களில் நடித்துவருகிறார். அவரைத்தொடர்ந்து மோகன்லாலின் மகள் விஸ்மயா மோகன்லால் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம் ஆக உள்ளார். விஸ்மயா தாய் தற்காப்... மேலும் பார்க்க

"கூமாபட்டியை விட்டுட்டு சென்னையில் தங்கப்போறேன்; ஏன்னா!" - வைரல் இளைஞர் தங்கபாண்டி பேட்டி

“ஏஏஏஏஏஏஏஏங்க.... தமிழ்நாட்டிலேயே எங்க ஊரு கூமாபட்டி மாதிரி எங்கேயுமே கிடையாது. ஏன்... ஒலகத்துலயே கிடையாது" என ஒன்மேன் ஆர்மியாய், கூமாபட்டியை வைரலாக்கிய இளைஞர் தங்கபாண்டி, 'இனி சென்னையில் வசிக்கப்போகிற... மேலும் பார்க்க

`அப்பா பாஜக மத்திய அமைச்சர் என்பதால் எனக்கெதிராக...' - சுரேஷ் கோபியின் மகன் ஆதங்கம்!

கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகர் சுரேஷ் கோபி மத்திய இணை அமைச்சராக உள்ளார். அவரது மகன் மாதவ் சுரேஷ் சினிமாக்களில் நடித்துவருகிறார். சுரேஷ் கோபி கதாநாயகனாக நடித்துள்ள ஜானகி வி/எஸ் ஸ்டேட் ஆஃப் கேரளா... மேலும் பார்க்க

``பறந்து போ பெற்றோர்களுக்கான படம்; ஏழு கடல் ஏழு மலை..'' - கோவை பிரீமியர் ஷோ-வில் இயக்குனர் ராம்

கோவையில் `பறந்து போ' பிரீமியர் காட்சிகற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ராமின் அடுத்த படைப்பான பறந்து போ திரைப்படம் பிப்ரவரி மாதம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட வ... மேலும் பார்க்க