செய்திகள் :

``வாழ்நாள் முழுவதுமான சினிமாவின் முதல்படி..'' - நடிகையாகும் மகள் விஸ்மயாவுக்கு மோகன்லால் வாழ்த்து!

post image

மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ் சினிமாக்களில் நடித்துவருகிறார். அவரைத்தொடர்ந்து மோகன்லாலின் மகள் விஸ்மயா மோகன்லால் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம் ஆக உள்ளார்.

விஸ்மயா தாய் தற்காப்பு கலையில் தேர்ச்சிபெற்றவர். பயணங்களிலும், எழுத்துக்களிலும் அதீத ஆர்வம் கொண்டவர். விஸ்மயா மோகன்லால் எழுதிய கிரெய்ன்ஸ் ஆஃப் ஸ்டார்டஸ்ட் (Grains Of Stardust) புத்தகம் கவனம் பெற்றிருந்தது. சினிமாவில் ஆர்வம் இல்லை என கூறிவந்தார் விஸ்மயா. பொது நிகழ்ச்சிகளில் தலைகாட்டுவதை தவிர்த்தும் வந்தார்.

இந்த நிலையில் விஸ்மயா மோகன்லால் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆன்றணி பெரும்பாவூரின் ஆசீர்வாத் சினிமாஸின் 37-வது சினிமாவான துடக்கம் என்ற சினிமாவில் கதாநாயகியாக நடிக்கிறார். ஜூட் ஆன்றணி ஜோசப் திரைக்கதை எழுதி இயக்குகிறார்.

மோகன்லால்

ஆசீர்வாத் சினிமாஸ் தயாரித்துள்ள சினிமாக்களில் ஒருசிலவற்றை தவிர மற்ற அனைத்திலும் மோகன்லால் கதாநாயகனாக நடித்துள்ளார்.

சினிமாவில் முதன் முதலாக அடியெடுத்து வைக்கும் மகள் விஸ்மயாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் மோகன்லால். "அன்புள்ள மாயாக்குட்டி, துடக்கம் என்ற சினிமா வாழ்நாள் முழுவதுமான உனது சினிமாவின் அன்பு பந்தத்துக்கு முதல்படியாக அமையட்டும்" என மோகன்லால் வாழ்த்தியுள்ளார்.

மேலும், துடக்கம் சினிமா போஸ்டரை ஃபேஸ்புக்கில் ஷேர் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் மோகன்லால்.

இதுபற்றி இயக்குநர் ஜூட் ஆன்றணி ஜோசப் கூறுகையில், "எனது லாலேட்டனுடையவும், சுஜி சேச்சியுடையவும் அன்பு மகள் மாயா-வின் முதல் சினிமாவை என்னை நம்பி ஒப்படைக்கும்போது அவர்களின் கண்களில் மகிழ்ச்சியையும், எதிர்பார்ப்பையும் பார்த்தேன். அவர்களின் நம்பிக்கையை நான் வீணாக்கமாட்டேன். இது ஒரு குட்டி சினிமா. எப்போதும் என் மனது சொல்லும் சினிமாக்களைதான் நான் இயக்குவேன். இதுவும் அப்படித்தான். இது தொடக்கம் ஆகட்டும் என ஆத்மார்த்தமாக விரும்புகிறேன்" என்றார்.

விஸ்மயா மோகன்லால்

துடக்கம் சினிமா-வுக்கான டைட்டில் போஸ்டரில் தற்காப்புகலை குறித்த சிம்பல்கள் இடம்பெற்றுள்ளன. எனவே இது தற்காப்புகலை சம்பந்தமான சினிமாவாக இருக்கலாம் என கூறப்படுகிறது. மோகன்லால் தனது மகன் பிரணவ் நடித்த முதல் சினிமாவில் ஒரு சில காட்சிகளில் முகம் காட்டினார். அதுபோன்று தனது மகள் விஸ்மயாவின் முதல் சினிமாவிலும் சில காட்சிகளில் மோகன்லால் நடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

"கூமாபட்டியை விட்டுட்டு சென்னையில் தங்கப்போறேன்; ஏன்னா!" - வைரல் இளைஞர் தங்கபாண்டி பேட்டி

“ஏஏஏஏஏஏஏஏங்க.... தமிழ்நாட்டிலேயே எங்க ஊரு கூமாபட்டி மாதிரி எங்கேயுமே கிடையாது. ஏன்... ஒலகத்துலயே கிடையாது" என ஒன்மேன் ஆர்மியாய், கூமாபட்டியை வைரலாக்கிய இளைஞர் தங்கபாண்டி, 'இனி சென்னையில் வசிக்கப்போகிற... மேலும் பார்க்க

`அப்பா பாஜக மத்திய அமைச்சர் என்பதால் எனக்கெதிராக...' - சுரேஷ் கோபியின் மகன் ஆதங்கம்!

கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகர் சுரேஷ் கோபி மத்திய இணை அமைச்சராக உள்ளார். அவரது மகன் மாதவ் சுரேஷ் சினிமாக்களில் நடித்துவருகிறார். சுரேஷ் கோபி கதாநாயகனாக நடித்துள்ள ஜானகி வி/எஸ் ஸ்டேட் ஆஃப் கேரளா... மேலும் பார்க்க

``பறந்து போ பெற்றோர்களுக்கான படம்; ஏழு கடல் ஏழு மலை..'' - கோவை பிரீமியர் ஷோ-வில் இயக்குனர் ராம்

கோவையில் `பறந்து போ' பிரீமியர் காட்சிகற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ராமின் அடுத்த படைப்பான பறந்து போ திரைப்படம் பிப்ரவரி மாதம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட வ... மேலும் பார்க்க

ஷெஃபாலி ஜரிவாலா: 42 வயதில் மாரடைப்பால் இறந்த இந்தி பிக் பாஸ் பிரபலம்

இந்தி நடிகை மற்றும் இந்தி பிக் பாஸ் 13 சீசனின் பிரபலம் ஷெஃபாலி ஜரிவாலா. இவருக்கு வயது 42.இவருக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இவரை உடனடியாக அவரது கணவர் மும்பையில் உள்ள மருத்துவமனைக்க... மேலும் பார்க்க

Retro நாயகிகள் 09: `நான் நடிகையானதுக்குக் காரணம் அந்த டீக்கடை தான்’ - நடிகை சுமித்ரா பர்சனலஸ்!

தமிழ் சினிமா எத்தனையோ பேரழகிகளை, நடிப்பில் உச்சம்தொட்ட திறமையான நடிகைகளைப் பார்த்திருக்கு. அதுல 70-கள்ல, மென்மையான அழகோட, நல்ல நடிப்புத்திறமையோட வலம் வந்தவங்க நடிகை சுமித்ரா. அவங்களைப்பத்திதான் இன்னிக... மேலும் பார்க்க