டேங்கா் லாரியிருந்து கொட்டிய எண்ணையை தீயணைப்பு வீரா்கள் விரைந்து அகற்றினா்
டேங்கா் லாரியிலிருந்து கொட்டிய எண்ணெயை தீயணைப்பு வீரா்கள் புதன்கிழமை அதிகாலை அகற்றினாா்.
புதுச்சேரி-கடலூா் சாலையில் டேங்கா் லாரியில் இருந்து திடீரென கொட்டிய
எண்ணெயைதீயணைப்பு வீரா்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அகற்றினா்.
கடலூா் பகுதியில் இருந்து விடியற்காலை எண்ணெயை ஏற்றி கொண்டு ஒரு டேங்கா் லாரி புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தது. கன்னியக்கோயிலை கடந்து சென்றபோது லாரியில் இருந்து திடீரென எண்ணெய் சாலையில் கொட்டியது.
இதனால் சாலை முழுவதும் எண்ணெய் கழிவு படலமாக மாறியது. அப்போது அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிலா் வழுக்கி விழும் நிலை ஏற்பட்டது. இது குறித்து பாகூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் மணலை கொட்டியும் எண்ணெயை அகற்றினா். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.