பான் கார்டு விண்ணப்பிக்கவும் ஆதார் அவசியம்! மத்திய அரசு அறிவிப்பு!
ஓடிடியில் வெளியானது தக் லைஃப்!
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தக் லைஃப் படம் இன்று(ஜூலை 3) ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு நடிப்பில் உருவான ‘தக் லைஃப்’ திரைப்படம் கடந்த ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
படத்தின் கதை, திரைக்கதை மற்றும் சிம்பு, த்ரிஷாவின் கதாபாத்திரங்கள் அளித்த ஏமாற்றம் என பல விஷயங்கள் ரசிகா்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இப்படம் உலகளவில் ரூ. 95 கோடி வரை வசூலித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில்,தக் லைஃப் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளியாகியுள்ளது.
இப்படம் திரைக்கு வந்து 8 வாரங்கள் கழித்தே ஓடிடிக்கு வரும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்திருந்த நிலையில், முன்னதாகவே வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
The OTT version of the film Thak Life, starring actor Kamal Haasan, was released today (July 3).
இதையும் படிக்க: 2 ஓடிடி தளங்களில் வெளியாகும் மெட்ராஸ் மேட்னி!