செய்திகள் :

கந்து வட்டி கொடுமை! விஜய்க்கு தவெக உறுப்பினர் தற்கொலை வாக்குமூலம்!

post image

புதுச்சேரியில் கந்து வட்டி கொடுமையால் கடிதம் எழுதி வைத்துவிட்டு, தவெக உறுப்பினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலம், நெல்லித்தோப்பு பகுதியில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த விக்ரமன் (34) என்பவர், தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினராகவும் இருந்து வந்தார்.

குடும்பச் சூழ்நிலையின் காரணமாக சிலரிடம் கடனும் வாங்கியிருந்த விக்ரமனுக்கு திடீர் உடல்நலக் குறைவு காரணமாக, கடனைத் திரும்பச் செலுத்த முடியாமல் தவித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், புதன்கிழமையில் (ஜூலை 2) வேலைக்கு சென்றுவிட்டு திரும்பியவர், தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, வெளியில் சென்றிருந்த அவரது மனைவி, விக்ரமன் தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, விக்ரமனின் உடலை மீட்டு, உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, விக்ரமனின் வீட்டில் சோதனை மேற்கொண்டதில், கடிதங்கள் மூலம் தற்கொலைக்கான வாக்குமூலத்தையும் அவர் எழுதியிருந்தார். கடிதத்தில், ஒருவரிடம் வாங்கிய ரூ.3.80 லட்சம் கடனை, உடல்நலக் குறைவு காரணமாக திரும்பச் செலுத்துவதில் ஏற்பட்ட காரணமாக, தன்னையும் மனைவியையும் இழிவாகப் பேசுவதாகவும், வேறொருவரிடத்தில் கடன் வாங்குவதற்காக முன்பணம் செலுத்திய நிலையில், அந்தப் பணத்தை அவர் ஏமாற்றி விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

அவர் தவெக தலைவர் விஜய்யை குறிப்பிட்டு கூறுகையில், எனக்கு நடந்ததுபோல 10, 15 சதவிகித வட்டிக்கு கடன் கொடுத்து, சித்ரவதை செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இனி வரும் ஆட்சியில் கந்து வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் அச்சப்பட வேண்டும். மேலும், தயவுசெய்து என் மனைவி மற்றும் குழந்தைகளின் படிப்புக்கும் வாழ்க்கைக்கும் உதவி செய்யுங்கள். எனது உடல் உறுப்புகளை எடுத்துக் கொண்டு, எனது குடும்பத்துக்கு பண உதவி செய்யுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

இதையும் படிக்க:மெட்டாவில் ரூ.853 கோடி சம்பளத்தில் இந்தியருக்கு வேலை!

PY TVK member committed suicide due to the cruelty of usury

திருப்புவனம் அஜித்குமாருக்கு கஞ்சா அளித்து கொடூரத் தாக்குதல்! மூளையில் ரத்தக் கசிவு, சிகரெட் சூடு!

திருப்புவனம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் மருத்துவப் பரிசோதனை வெளியாகியுள்ளது.சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவரின் நகை காணாமல் போன விவகாரத்தில் விசாரணைக... மேலும் பார்க்க

பிரசார இயக்கத்தில் காபி-லாம் தராங்களா.? - விடியோ அழைப்பில் முதல்வர் ஸ்டாலின் கலகல பேச்சு

ஓரணியில் தமிழ்நாடு பிரசார இயக்கத்தில் திருப்பூர் மாவட்டச் செயலர் ஒருவருடன் முதல்வர் ஸ்டாலின் கலகலப்பாக பேசிய விடியோ வெளியாகியுள்ளது.திமுகவின் திட்டங்களையும் சாதனைகளையும் மக்களிடம் எடுத்துரைத்து, 2026 ... மேலும் பார்க்க

தமிழ்நாட்டின் ஒற்றுமையே நமது வலிமை! - முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டின் ஒற்றுமையே நமது வலிமை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுகவின் திட்டங்களையும் சாதனைகளையும் மக்களிடம் எடுத்துரைத்து, 2026 பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை மேற்கொள்ளும் விதமாக ‘ஓரணிய... மேலும் பார்க்க

ஒரே நாளில் இரு மாணவர்கள் கொலை? திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

ஒரே நாளில் சிறுவன் ஒருவன் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும், மோதலில் மாணவர் ஒருவர் உயிரிழந்ததாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.கிருஷ்ணகிரியில் 13 வயதான ரோகித் ... மேலும் பார்க்க

போதைப் பொருள் விவகாரம்: ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி!

போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. கொகைன் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா இர... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி அருகே முதிய தம்பதியை மிரட்டி 170 பவுன் நகைகள் கொள்ளை!

கள்ளக்குறிச்சி: கடுவனூர் கிராமத்தில் மூதாட்டி தம்பதிகள் படுத்து உறங்கிக் கொண்டிருந்த போது நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவினை உடைத்து முகமூடி அணிந்து வந்த நான்கு பேர் கம்பியை காண்பித்து கொலை செய்து வி... மேலும் பார்க்க