செய்திகள் :

மெர்சிடிஸ் பென்ஸின் ஜிடி 63, ஜிடி 63 புரோ இந்தியாவில் அறிமுகம்!

post image

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஏ.எம்.ஜி ஜிடி 63 மற்றும் ஜிடி 63 புரோ ஆகிய கார்களை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

சிறப்பம்சங்கள் என்ன?

இது பரிணாம வளர்ச்சியுடன் கூடிய வடிவமைப்பைப் பெறுகிறது. எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லைட்கள், பெரிய ஏர் இன்டேக்குகள், ஸ்பாய்லர் மற்றும் ஸ்போர்ட் ரியர் டிஃப்பியூசர் உள்ளது.

மேலும் இரட்டை ஜிட்டல் டிஸ்ப்ளேக்கள், 3 ஸ்போக் ஏஎம்ஜி ஸ்டீயரிங் வீல் மற்றும் முன்புறத்தில் ஸ்போர்ட் இருக்கைகளும், பாதுகாப்புக்காக பல ஏர்பேக்குகள், 3 பாயின்ட் சீட் பெல்ட்களும் உள்ளன.

இந்த காரில் 4.0 லிட்டர் டிவின் டர்போ வி8 என்ஜின் இடம்பெற்றுள்ளது. ஏம்எம்ஜி ஜிடி 63யில் இந்த என்ஜின் 585 பிஎச்பி பவரையும், 800 என்எம் டார்கையும் வெளிப்படுத்தும். ஜிடி.63 புரோவில் 612 பிஎச்பி பவரையும், 850 எம்என் டார்கையும் வெளிப்படும்.

9 ஸ்பீடு ஸ்பீடு ஷிப்ட் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த காரில் இடம்பெற்றுள்ளன. 100 கிலோ மீட்டர் வேகத்தை 3.2 நொடிகளிலேயே எட்டிவிடும் என்றால் பாருங்கள்.

மெர்சிடிஸ் பென்ஸின் ஏ.எம்.ஜி ஜிடி 63 மற்றும் ஜிடி 63 புரோ ஆகிய கார்களை ஜூன் 27 முதல் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இந்த காரின் ஆரம்ப ஷோரூம் விலை ரூ.3 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Mercedes-AMG GT 63 And GT 63 Pro Launched In India, Prices Start From Rs 3 Crore

லெவல் 2 அடாஸ் வசதியுடன்.. மஹிந்திராவின் புது வேரியண்ட்!

மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ என் லெவல் 2 அடாஸ் வேரியண்டை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. சிறப்பம்சங்கள் என்ன?ஸ்கார்பியோ என் அடாஸ் வேரியண்டில் புதிய அம்சமாக லெவல் 2 அடாஸ் இடம் பெற்றுள்ளது. இத... மேலும் பார்க்க

ஹார்லி டேவிட்சன் பிரியர்களுக்கு.. புதிய அறிமுகம்!

ஹார்லி டேவிட்சன் பிரியர்களுக்காக புதிய மேம்படுத்தப்பட்ட ஸ்டிரீட் பாப்(street bob) பைக்கை இந்தியச் சந்தைகளில் அறிமுகம் செய்துள்ளது.இருசக்கர வாகனங்களில் ஹார்லி டேவிட்சன் என்றாலே எப்போதும் தனி மவுசு தான்... மேலும் பார்க்க

டிரையம்ப் ஸ்பீடு.. இப்போது புதிய வண்ணங்களில்!

டிரையம்ப் நிறுவனம் இப்போது புதிய வண்ணங்களில் ஸ்பீடு டி4 என்ற பைக்கை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. என்னென்ன சிறப்பம்சங்கள்..டிரையம்ப் ஸ்பீடு விரும்பும் ரைடர்களுக்காவே இந்திய சந்தையில் பல்வேறு வண்ணங்க... மேலும் பார்க்க

சிஎன்ஜி ரெட்ரோபிட்: நிசான் மேக்னைட் காரின் புதிய ஸ்டைல்!

நிசான் நிறுவனம் தனது மேக்னைட் காரில் சி.என்.ஜி ரெட்ரோபிட்டெட் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. வாடிக்கையாளரைக் கவரும் வகையில் புதிய ஸ்டைல் ஒன்றை நிசான் நிறுவனம் கையாண்டுள்ளது. அதன்படி, நிசான் மேக்னைட் கார... மேலும் பார்க்க