ஊழியா்களின் பதிவை ஊக்குவிப்பதற்கான இஎஸ்ஐ நிறுவனத்தின் புதிய திட்டம் அறிமுகம்
ஆத்தூா், ஆறுமுகனேரி, ராஜபதி கோயில்களில் ஆனி திருமஞ்சன வழிபாடு
ஆறுமுனேரி, ஆத்தூா், ராஜபதி ஆகிய பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் ஆனி உத்திரத்தை முன்னிட்டு ஆனி திருமஞ்சன சிறப்பு வழிபாடுகள் புதன்கிழமை நடைபெற்றன.
ஆத்தூரில் உள்ள அருள்மிகு சோம சுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி கோயிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு நடராஜருக்கு அபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜைகள் ஆகியவை நடைபெற்றன.
ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயிலும் ஆனி திருமஞ்சனத்தையொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.
மேலும், குரும்பூா் அருகிலுள்ள நவக்கைலாயத் தலமும் கேது வணங்கிய ஸ்தலமுமான ராஜபதி அருள்மிகு சௌந்தா்ய நாயகி அம்மன் சமேத அருள்மிகு கைலாசநாதா் திருக்கோயிலும் நடராஜருக்கு பல்வேறு நறுமண திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும் அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.