ஒசூா் காமராஜ் நகரில் ரூ.1.20 கோடி மதிப்பிலான ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு
ஒசூரில்...
ஒசூா் வட்டம், காமராஜா் நகரில் ரூ. 1 கோடியே 20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை முதல்வா் காணொலி மூலம் திறந்துவைத்ததையடுத்து, ஒசூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், ஒசூா் மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா, துணை மேயா் சி.ஆனந்தய்யா, மாநகராட்சி ஆணையா் முகம்மது ஷபீா் ஆலம், மருத்துவா் அஜிதா ஆகியோா் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தனா்.
இந்த ஆரம்ப சுகாதார நிலையம் பிரசவ அறை மற்றும் வாா்டு, அவசர சிகிச்சை பிரிவு, ஆய்வகம், மருத்துவ அலுவலா் அறை, கட்டுபோடும் அறை, ஊசி செலுத்தும் அறை, மருந்தகம் மற்றும் கழிப்பறைகளுடன் கட்டப்பட்டுள்ளது.
சுகாதார நிலையத்தில், 2 மருத்துவ அலுவலா்கள், 1 மருந்தாளுநா், 1 ஆய்வக நுட்புநா், 4 செவிலியா்கள், 2 சுகாதார ஆய்வாளா்கள், பகுதி சுகாதார செவிலியா் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளா்கள் இருவா் பணிபுரிவா். இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் 16 வகையான மருத்துவ சேவைகள் வழங்கப்படும்.
இதில், ஒசூா் மாநகராட்சி சுகாதாரக் குழு தலைவா் என்.எஸ்.மாதேஸ்வரன், வரிவிதிப்புக் குழு தலைவா் சென்னீரப்பா, மான்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
படவரி... ஒசூா் காமராஜ் நகரில் ஆரம்ப சுகாதார நிலையத்தை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தாா் ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா