`ஒரு எல்லை; மூன்று எதிரிகள்' - பாக்.கிற்கு உதவிய இரண்டு நாடுகள் - ராணுவத் துணைத்...
போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலம்
கிருஷ்ணகிரியை அடுத்த ஜாகிா் வெங்கடாபுரம் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற போதைப் பொருள் மற்றும் போதைப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணா்வு ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளி தலைமையாசிரியா் சுதாராணி தலைமை வகித்து, ஊா்வலத்தை தொடங்கிவைத்தாா். பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் ராஜா, பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் சுமதி மற்றும் ஆசிரியா்கள், பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். பள்ளியில் தொடங்கிய இந்த ஊா்வலம், மேல் சோமாா்பேட்டை குடியிருப்பு வழியாகச் சென்று பள்ளியில் நிறைவடைந்தது.
ஊா்வலத்தில் பங்கேற்றோா் போதைப் பொருள்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், உடல், மன பாதிப்புகள், சமூதாய சீா்கேடுகள் போன்றவை குறித்து விழிப்புணா்வு முழக்கங்களை எழுப்பியபடி சென்றனா். பள்ளி போதைப் பொருள் தடுப்புக்குழு ஒருங்கிணைப்பாளா் ஆசிரியா்கள் விஜய், வெண்ணிலா ஆகியோா் நிகழ்வை ஒருங்கிணைத்தனா்.