செய்திகள் :

`ஒரு எல்லை; மூன்று எதிரிகள்' - பாக்.கிற்கு உதவிய இரண்டு நாடுகள் - ராணுவத் துணைத் தலைவர் பேச்சு

post image

ஆபரேஷன் சிந்தூருக்கு பின், இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த தாக்குதலின் போது, சீனா மற்றும் துருக்கி பாகிஸ்தானுக்கு உதவியதாக, ராணுவத் துணைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ராகுல் ஆர் சிங் தெரிவித்துள்ளார்.

இன்று டெல்லியில் நடந்த FICCI நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இவர் பேசியதாவது.

"டைரக்டர் ஜெனரல் அளவிலான பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தப் போது, நமது படைகள் எங்குங்கு உள்ளது என்கிற தகவல்களைப் பாகிஸ்தானுக்கு சீனா வழங்கி கொண்டிருந்தது. அப்போது, நாம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற சூழலில் இருந்தோம்.

operation sindoor
Operation Sindoor - ஆபரேஷன் சிந்தூர்

`லைவ் லேப்'

நமக்கு ஒரே ஒரு எல்லை தான். ஆனால், இருந்த எதிரிகள் என்னவோ மூன்று பேர். பாகிஸ்தான் முன்னிலையில் நின்றது. சீனா பாகிஸ்தானுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்தது. பாகிஸ்தானின் 81 சதவிகித ராணுவ தளவாடங்கள் சீனாவின் உடையது ஆகும்.

சீனா அவர்களது ஆயுதங்களை மற்ற ஆயுதங்களோடு மோத வைத்து சோதித்துகொண்டது. அதனால், சீனாவிற்கு அது 'லைவ் லேப்' போல இருந்தது.

பல டிரோன்கள்...

துருக்கியும் பாகிஸ்தானுக்கு வேண்டிய உதவிகளை செய்துகொண்டிருந்தது. அந்த சமயத்தில், பல டிரோன்கள் அங்கே வந்துகொண்டிருந்ததை பார்த்தோம்.

அடுத்து, இனி இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே எதாவது மோதல் போக்கு ஏற்பட்டால், பாகிஸ்தான் இந்தியாவின் மக்கள் இடையே தாக்குதல் நடத்தும். நாம் அதற்கு தயாராக இருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

TVK: ``பொதுமன்னிப்புக் கேட்டு பதவி விலகுங்கள் முதல்வரே!'' - ஆதவ் அர்ஜூனா காட்டம்!

'செயற்குழுக் கூட்டம்!"தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழுக் கூட்டம் பனையூரில் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடந்து முடிந்திருக்கிறது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்ச... மேலும் பார்க்க

ட்ரம்பின் தொலைபேசி அழைப்பு; ``அவர் கோபப்படுவார்..'' - கூட்டத்தை பாதியில் விட்டு கிளம்பிய புதின்!

ரஷ்யா - உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை, இரு நாடுகளுக்கு இடையே தாக்குதல்கள், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதினிடம் போன்கால் பேச்சுவார்த்தை - இது சமீபகாலம் தொடர்கதை ஆகும். நேற்றும் ட்ரம்ப் - புதி... மேலும் பார்க்க

Secularism: ``மதச்சார்பற்றவராக யாராலும் வாழ முடியாது.." - சங்கராச்சாரியார் பேச்சால் சர்ச்சை!

"சோசலிசம்" மற்றும் "மதச்சார்பின்மை" என்ற சொற்களை இந்திய அரசியலமைப்பிலிருந்து நீக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். இந்த நிலையில், "மதச்சார்பின்மை" என்ற வார்த்தை க... மேலும் பார்க்க

Putin: ``எங்கள் இலக்குகளை எட்டும் வரை ரஷ்யா பின்வாங்காது..'' - ட்ரம்ப்பிடம் புதின் திட்டவட்டம்!

ரஷ்ய அதிபர் புதின், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பிடம் உக்ரைன் விவகாரத்தில் மாஸ்கோ அதன் இலக்குகளை அடையாமல் பின் வாங்காது என்றும் ஆனாலும் பேச்சுவார்த்தைகளுக்கு தயாராகக இருப்பதாகவும் தெரிவித்ததாக ரஷ்... மேலும் பார்க்க

`பாரத மாதா படம்' - கவர்னர் நிகழ்ச்சியை ரத்து செய்த கேரள பல்கலை. பதிவாளர் சஸ்பெண்ட் - என்ன நடந்தது?

கேரள மாநில கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்துகொள்ளும் விழா மேடைகளில் பாரதமாதா படம் அலங்கரித்து வைப்பது வழக்கம். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு பாரதமாதா படத்துக்கு கவர்னர் மலர் தூவி வணங்குவது ... மேலும் பார்க்க