Suresh Raina: "இனிதான் சின்ன தல ஆட்டம் ஆரம்பம்!" - ஹீரோவாக அறிமுகமாகும் ரெய்னா!
148 ஆண்டுகளில்.. வரலாற்றுச் சாதனை படைத்த ஜேமி ஸ்மித்!
இங்கிலாந்து வீரர் ஜேமி ஸ்மித், 148 ஆண்டுகளில் வரலாற்றுச் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில், 587 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. கேப்டன் ஷுப்மன் கில் அதிகபட்சமாக 269 ரன்கள் எடுக்க, அவரைத் தொடர்ந்து, ரவீந்திர ஜடேஜா 89 ரன்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 87 ரன்களும் சேர்த்தனர்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் சொதப்ப, பொறுப்புடன் விளையாடிய ஹாரி ப்ரூக் மற்றும் ஜேமி ஸ்மித் ஜோடி ரன் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்தனர். சிறப்பாக விளையாடிய ஜேமி ஸ்மித் 80 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். ஜேமி ஸ்மித் 102* ரன்களுடனும் (14 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்), ஹாரி ப்ரூக் 91* ரன்களுடனும் (11 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்) களத்தில் உள்ளனர்.
சதம் விளாசிய மட்டுமின்றி, கடந்த 148 ஆண்டுகளில் இங்கிலாந்துக்காக அதிவேகமாக சதம் விளாசியவர்களில் ஹாரி புரூக்கை பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்காக அதிவேக சதம் விளாசியவர்கள்
கில்பெர்ட் ஜெஸ்ஸோப் -76 பந்துகள் (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக)
ஜானி பேர்ஸ்டோ - 77 பந்துகள் (நியூசிலாந்து)
ஜேமி ஸ்மித் - 80 பந்துகள் (இந்தியா)
ஹாரி புரூக் - 80 பந்துகள் (பாகிஸ்தான்)
பென் ஸ்டோக்ஸ் - 85 பந்துகள் (நியூசிலாந்து)
For the first time in 148 years, England player Jamie Smith has achieved a historic feat.
இதையும் படிக்க: அதிரடியாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்ட ஹாரி ப்ரூக், ஜேமி ஸ்மித்!