இந்தோ-திபெத் படை சாா்பில் விழிப்புணா்வு மிதிவண்டி பயணம்: ஜூலை 8-ல் தொடக்கம்
59 முறை அதிக சந்தா பெற்ற கிரிசாக் ஐபிஓ!
புதுதில்லி: மாணவர் ஆட்சேர்ப்பு மற்றும் தீர்வுகள் வழங்குநரான கிரிசாக் லிமிடெட், தனது ஐபிஓ-வின் இறுதி நாளில் இன்று 59.82 முறை சந்தா பெற்றதாக தெரிவித்துள்ளது.
ரூ.860 கோடி மதிப்புள்ள ஆரம்ப பங்கு விற்பனையில் 2,58,36,909 விண்ணப்பத்திற்கு 1,54,56,79,488 பங்குகள் விற்பனைக்கு வந்ததாக தெரிவித்துள்ளது என்எஸ்இ தரவு.
தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கான பங்கு 134.35 மடங்கு அதிகமாக சந்தா பெற்ற நிலையில், நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்களுக்கான ஒதுக்கீடு 76.15 மடங்கு சந்தாவைப் பெற்றது. அதே வேளையில் சில்லறை தனிநபர் முதலீட்டாளர்களிடம் 10.24 மடங்கு சந்தாவைப் பெற்றது கிரிசாக்.
ஆரம்ப சலுகை விலையாக பங்கு ஒன்றுக்கு ரூ.233 முதல் ரூ.245 என விலை வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. அதே வேளையில் நிறுவனம் முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.258 கோடியைப் பெற்றுள்ளதாக தெரிவித்தது.
கடந்த ஆண்டு நவம்பரில் ரூ.1,000 கோடி திரட்ட முன்மொழிந்த நிறுவனம், வெளியீட்டு அளவை தற்போது ரூ.860 கோடியாகக் குறைத்துள்ளது. சலுகை அளவு குறைவதற்கான எந்த குறிப்பிட்ட காரணத்தையும் நிறுவனம் தெரிவிக்கவில்லை.
நிறுவனத்தின் பங்குகள் பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ-யில் பட்டியலிடப்படும்.
இந்த ஐபிஓ-விற்கான முன்னணி மேலாளர்களாக ஈக்விரஸ் கேபிடல் மற்றும் ஆனந்த் ரதி அட்வைசர்ஸ் உள்ளனர்.
இதையும் படிக்க: பாகிஸ்தானை விட்டு வெளியேறிய மைக்ரோசாஃப்ட்!