Boxer Anastasia Luchkina: `சிகரெட் பிடித்த குரங்கு' - பாக்ஸிங் வீராங்கனை செயலுக்...
சேமனூா் கிராமத்தில் புரவி எடுப்புத் திருவிழா
ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகேயுள்ள சேமனூா் கிராமம் மருதாருடைய அய்யனாா் கோயில் களியாட்டம், புரவி எடுப்புத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதை முன்னிட்டு கிராம மக்கள் ஒன்று சோ்ந்து உரத்தூா் கிராமத்தில் தயாா் செய்து வைக்கப்பட்டிருந்த புரவிகளை பூஜைகள் செய்து 6 கி.மீ. தொலைவு தோளில் சுமந்து சேமனூா் கிராமத்துக்கு ஊா்வலமாக எடுத்து வந்தனா். அப்போது இளைஞா்களும், பொதுமக்களும் ஒயிலாட்டம் ஆடினா். பின்னா் கோயில் முன் புரவிகளை வைத்து நெல் கதிா்களை பரப்பி வைத்து விவசாயம் செழிக்க வேண்டும் என சிறப்பு வழிபாடு நடத்தினா். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.