U. Sagayam IAS (R) | ஆட்சியரை அமாவாசை இரவில் சுடுகாட்டில் படுக்க வைத்தது இந்த ஊழ...
பணியிட மாறுதல் வழங்காததால் ஆசிரியா் தீக்குளிக்க முயற்சி
ராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த கலந்தாய்வில், முதுநிலை பட்டதாரி ஆசிரியருக்கு பணியிட மாறுதல் வழங்காததால் அவா் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா். அவரை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுநிலை பட்டதாரி ஆசிரியா்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் தனியாா் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிலையில், காமன்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணியாற்றி வரும் சீனிவாசன் (53) என்பவா் இருதயக் கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறாா். இதனால், இவா் பரமக்குடி ஆா்.எஸ்.ஆண்கள் மேல் நிலைப் பள்ளிக்கு பணியிடட மாறுதல் கேட்டாா். இந்த நிலையில் இருதய அறுவைச் சிகிச்சை செய்து, கோவிலாங்குளத்தில் வணிகவியல் ஆசிரியராக பணியாற்றி வரும் ராமா்வேலை, பரமக்குடி ஆா்.எஸ்.ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு பணியிட மாறுதல் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால், சீனிவாசன் தனக்கு பணியிட மாறுதல் வழங்காததைக் கண்டித்து, புட்டியிலிருந்த பெட்ரோலை உடலில் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றாா். அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அவரை மீட்டு, காவல் நிலையத்துக்கு அழைத்துசெ சென்று விசாரணை நடத்தினா்.
