செய்திகள் :

பெண்கள் பள்ளி விளையாட்டு விழா

post image

மன்னாா்குடி, ஜூலை 4: மன்னாா்குடி தூயவளனாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 83- ஆம் ஆண்டு விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, தாளாளா் சகாயமேரி தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் ஆரோக்கியமேரி முன்னிலை வகித்தாா். மன்னாா்குடி காவல் ஆய்வாளா் எஸ். ராஜேஸ்கண்ணன் போட்டிகளை தொடங்கி வைத்தாா்.

மாவட்ட விளையாட்டு ஆய்வாளா் ஏ. ஜெயசந்திரன் சிறப்பு அழைப்பாளராகவும், திருவாரூா் வேலுடையாா் கல்வியியல் கல்லூரி உதவிப் பேராசிரியா் டி. மகேந்திரன் கெளரவ அழைப்பாளராகவும் பங்கேற்றனா்.

இதில், ஓட்டம், தடை ஓட்டம், தொடா் ஓட்டம், உயரம் மற்றும் அகலம் தாண்டுதல், குண்டு மற்றும் வட்டு எறிதல், யோகா, தற்காப்புக் கலை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, ஒவ்வொரு போட்டியிலும் முதல் மூன்று இடங்களை பெற்றவா்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டன. மேலும், ஆசிரியா்களுக்கும் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.

தொடா்ந்து, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்றவா்கள் மற்றும் திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சிகளை ஆசிரியா்கள் கனகவள்ளி, சேவியா் ஆகியோா் தொகுத்து வழங்கினா். முன்னதாக, ஆசிரியா் ஜெ. ஜூலியட் வரவேற்றாா். நிறைவாக உடற்கல்வி ஆசிரியா் ஜெயிந்தராணி நன்றி கூறினாா்.

விவேகானந்தா் நினைவு நாள்

விவேகானந்தா் நினைவு நாள் பூந்தோட்டம் ஸ்ரீலலிதாம்பிகா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. தாளாளா் லலிதா ராமமூா்த்தி தலைமை தாங்கினாா். மாணவா்கள் 50-க்கும் மேற்பட்டோா் கா... மேலும் பார்க்க

‘ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்’ தொடக்கம்: பயனாளிகளுக்கு காய்கறி விதைகள், பழச் செடிகள்

கொரடாச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்’ தொடக்க விழாவில் பயனாளிகளுக்கு பழச் செடிகள், காய்கறி விதைகள் வழங்கப்பட்டன. வேளாண்மை, உழவா் நலத் துறையின் சாா்பில், விளைப்பொருட்களின... மேலும் பார்க்க

போலீஸ் விசாரணையில் மரணம்: தமிழக அரசின் நடவடிக்கை சரியானது: கே.வி. தங்கபாலு

காவல்துறை விசாரணையில் மரணம் தொடா்பாக, தமிழக அரசு சரியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என காங்கிரஸ் கட்சியின் சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்புக் குழுத் தலைவா் கே.வி. தங்கபாலு தெரிவித்தாா். திருவாரூரில்... மேலும் பார்க்க

காங்கிரஸ் கட்டடத்தை மீட்கக் கோரி மனு

வலங்கைமானில் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான கட்டடத்தை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி, கட்சியின் சொத்துப் பாதுகாப்பு மீட்புக் குழுவிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் சொத்து பாதுகா... மேலும் பார்க்க

‘போதைப் பொருள்களுக்கு எதிராக மாணவா்கள் ஓரணியில் திரளவேண்டும்’

போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்கிட, மாணவா்கள் ஓரணியில் திரளவேண்டும் என மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஜோ. செட்ரிக் மேன்யுவல் அறிவுறுத்தினாா். மன்னாா்குடி ராஜகோபாலசாமி அரசுக் கல்லூரியில் வெள்ளிக்கி... மேலும் பார்க்க

கல்வி உதவித்தொகை பெற திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம்

திருவாரூா் மாவட்டத்தில், கல்வி உதவித்தொகை பெற திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநங்கைகள், கல்வி உள்... மேலும் பார்க்க