செய்திகள் :

டிஎன்பிஎல்: ஒரே ஓவரில் 34 ரன்கள்..! வரலாறு படைத்த விமல் குமார்! (விடியோ)

post image

டிஎன்பிஎல் குவாலிஃபயர் 2 போட்டியில் திண்டுக்கல் வீரர் விமல் குமார் ஒரே ஓவரில் 34 ரன்கள் அடித்து வெற்றிக்கு வித்திட்டார்.

திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி திடலில் நேற்றிரவு (ஜூலை 4) குவாலிஃபயர் 2 போட்டி நடைபெற்றது.

முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லிஸ்  20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் சேர்க்க, திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 18.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்து வென்றது.

இந்தப் போட்டியில் திண்டுக்கல் வீரர் விமல் குமார் 30 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இந்தப் போட்டியில் திண்டுக்கல் அணி 8.4 ஓவரில் 63/3 என இருந்தது. பின்னர், விமல் குமார் வந்ததும் அணியில் ஸ்கோர் உயரத் தொடங்கியது.

16 ஓவர்கள் முடிவில் 127-4 என இருந்தது. 4 ஓவர்களுக்கு 52 ரன்கள் தேவையாக இருந்தது. 17-ஆவது ஓவரில் 4 6 6 6 6 6 என ஒரே ஓவரில் 34 ரன்கள் விளாசி விமல் குமார் போட்டியையே மாற்றிவிட்டார்.

டிஎன்பில் வரலாற்றில் இவ்வளவு ரன்கள் அடித்தது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

திண்டுக்கல் அணி 4-ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. கடந்த சீசனில் முதல்முறையாக கோப்பையை வென்றதும் குறிப்பிடத்தக்கது.

Dindigul player Vimal Khumar scored 34 runs in a single over to lead the team to victory in the TNPL Qualifier 2 match.

12/2: 2-ஆவது இன்னிங்ஸில் தடுமாறும் ஆஸி.யை மே.இ.தீ. அணி வீழ்த்துமா?

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் இரண்டாம் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி தடுமாறி வருகிறது. முதல் டெஸ்ட்டில் அபாரமாக வென்ற ஆஸ்திரேலிய அணி இரண்டாவது டெஸ்ட்டில் சுமாராகவே விளையாடி வருகிறது. முத... மேலும் பார்க்க

பும்ராவை மட்டுமே நம்பியிருக்க வேண்டியதில்லை..! வசனத்தை மாற்ற சிராஜிக்கு அர்ஷ்தீப் வேண்டுகோள்!

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அசத்திய முகமது சிராஜிக்கு அர்ஷ்தீப் வழங்கிய பாராட்டு நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது. இந்திய அணியில் பும்ரா முக்கியமான பந்துவீச்சாளர். கடந்த 2024ஆம் ஆண்டு டி20 உலகக் க... மேலும் பார்க்க

அதிகபட்ச ரன்கள் குவித்த விக்கெட் கீப்பராக வரலாறு படைத்த ஜேமி ஸ்மித்!

இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாறு படைத்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் நடைபெற்று வருகிறது. இந... மேலும் பார்க்க

முகமது சிராஜ் 6 விக்கெட்டுகள்; 407 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 407 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில... மேலும் பார்க்க

ஜேமி ஸ்மித் 157* ரன்கள், ஹாரி ப்ரூக் 140* ரன்கள்; வலுவாக மீண்டு வரும் இங்கிலாந்து அணி!

ஜேமி ஸ்மித் மற்றும் ஹாரி ப்ரூக்கின் அசத்தலான சதங்களால், தேநீர் இடைவேளையின்போது இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 355 ரன்கள் குவித்துள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்... மேலும் பார்க்க

15 ஆண்டுகளில் முதல் முறை... சொந்த மண்ணில் இங்கிலாந்து அணிக்கு வந்த சோதனை!

கடந்த 15 ஆண்டுகளில் முதல் முறையாக சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டிகளில் இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் பேட்டர்கள் சொதப்பியுள்ளனர்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ... மேலும் பார்க்க