செய்திகள் :

பும்ராவை மட்டுமே நம்பியிருக்க வேண்டியதில்லை..! வசனத்தை மாற்ற சிராஜிக்கு அர்ஷ்தீப் வேண்டுகோள்!

post image

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அசத்திய முகமது சிராஜிக்கு அர்ஷ்தீப் வழங்கிய பாராட்டு நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.

இந்திய அணியில் பும்ரா முக்கியமான பந்துவீச்சாளர். கடந்த 2024ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் பும்ரா குறித்து சிராஜ், “நான் ஜஸ்ஸி பாயை மட்டுமே நம்புகிறேன். ஏனெனில் அவர் ஆட்டத்தை மாற்றக்கூடிய ஒரே வீரர் அவர் மட்டுமே” என தப்பும் தவறுமான ஆங்கிலத்தில் பேசியது வைரலானது.

(ஐ ஒன்லி பிளிவ் ஆன் ஜஸ்ஸி பாய், பிகாஸ் ஹீ இஸ் கேம் சேஞ்சர் பிளேயர் ஹீ இஸ், ஒன்லி ஒன் காய் ஜஸ்பிரீத் பும்ரா - சிராஜ் பேசியது).

தற்போது, இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பும்ரா இல்லாமல் சிராஜ் அசத்தியதால் அந்த வசனத்தை மாற்றும்படி சிராஜிடம் அர்ஷ்தீப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வசனத்தை மாற்றுங்கள் சிராஜ் - அர்ஷ்தீப் புகழாரம்

டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் முடிவுக்குப் பிறகு சிராஜ் பிசிசிஐ நேர்காணலில் பேசிக்கொண்டிருந்தபோது அர்ஷ்தீப் அருகே வந்து, “திட்டங்கள் மாறிவிட்டன. நீங்கள் வசனத்தை மாற்றுங்கள் சிராஜ். ’இனிமேல் நான் என்னையும் பும்ராவையும் நம்புவேன்’ என மாற்றுங்கள்” என்றார்.

இது சிராஜிக்கு மிகப்பெரிய கௌரமாகக் கருதப்படுகிறது. சமூக வலைதளங்களில் இந்த விடியோவும் வைரலாகி வருகிறது.

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 407 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தது. இதன் மூலமாக ஃபாலோ-ஆனை தவிா்த்த அந்த அணி, தற்போது 180 ரன்கள் பின்தங்கியுள்ளது.

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 587 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்தின் பேட்டர்களை ஆகாஷ் தீப், சிராஜ் கூட்டணி வீழ்த்தினார்கள்.

குறிப்பாக இந்தப் போட்டியில் சிராஜ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

அர்ஷ்தீப் பேசிய அந்த விடியோவை பிசிசிஐ இணையதளத்தில் இருக்கும் இந்த இணைப்பில் காணலாம்.

The dialogue has been changed! Mohammed Siraj's famous one-liner is now, 'I Only Believe In Myself And Jassi Bhai', thanks to fellow pacer Arshdeep Singh.

யு-19 நான்காவது ஒருநாள்: சதம் விளாசி அதிரடியில் மிரட்டிய வைபவ் சூர்யவன்ஷி!

இங்கிலாந்துக்கு எதிரான 19 வயதுக்குட்பட்டோருக்கான 4-வது ஒருநாள் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக சதம் விளாசி அசத்தியுள்ளார்.19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒருநாள் தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து ... மேலும் பார்க்க

உணவு இடைவேளை: 357 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இந்தியா!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் உணவு இடைவேளையின்போது, இந்திய அணி 357 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில... மேலும் பார்க்க

சதம் அடிப்பதில் உறுதியாக இருந்தேன்: ஹாரி ப்ரூக்

சதம் அடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததாக இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் நடைபெற்று வருகிறது... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இங்கிலாந்து கேப்டன் விலகல்!

இந்திய மகளிரணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இங்கிலாந்து அணியின் கேப்டன் நாட் ஷிவர் பிரண்ட் விலகியுள்ளார்.இந்திய மகளிரணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட த... மேலும் பார்க்க

12/2: 2-ஆவது இன்னிங்ஸில் தடுமாறும் ஆஸி.யை மே.இ.தீ. அணி வீழ்த்துமா?

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் இரண்டாம் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி தடுமாறி வருகிறது. முதல் டெஸ்ட்டில் அபாரமாக வென்ற ஆஸ்திரேலிய அணி இரண்டாவது டெஸ்ட்டில் சுமாராகவே விளையாடி வருகிறது. முத... மேலும் பார்க்க

டிஎன்பிஎல்: ஒரே ஓவரில் 34 ரன்கள்..! வரலாறு படைத்த விமல் குமார்! (விடியோ)

டிஎன்பிஎல் குவாலிஃபயர் 2 போட்டியில் திண்டுக்கல் வீரர் விமல் குமார் ஒரே ஓவரில் 34 ரன்கள் அடித்து வெற்றிக்கு வித்திட்டார். திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி திடலில் நேற்றிரவு (ஜூலை 4) குவாலிஃபயர் 2 போட்டி நட... மேலும் பார்க்க