செய்திகள் :

குஜராத்தில் 21 வயதுக்குள்பட்ட இளம்பெண் ஊராட்சி தலைவராக தேர்வு: விதிகளை மீறியதா தேர்தல் ஆணையம்?

post image

குஜராத்தில் 19 வயது பெண் ஊராட்சி தலைவராக தேர்வான விவகாரத்தில் தேர்தல் ஆணையம் வேட்பாளர்களின் வயது உள்ளிட்ட விவரங்களை முறையாக ஆய்வு செய்யாததே முக்கிய காரணமென விமர்சனம் எழுந்துள்ளது.

ஊராட்சி தலைவராக ஒருவர் பதவியேற்க குறைந்தபட்சம் அந்த வேட்பாளர் 21 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டுமென்பதே இந்திய தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்டுள்ள விதி. ஆனால், அதனை மீறி குஜராத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஊராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது அரசு துறையின் அலட்சியமே காரணம் என்று விமர்சனம் எழுந்துள்ளது.

அஃப்ரோஸ்பானு சிபாய் என்ற இளம்பெண் குஜராத்தின் மேஹ்சேனா மாவட்டத்திலுள்ள கிலோசான் கிராமத்தில் நடைபெற்ற ஊராட்சி தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு அதில் வெற்றியும் பெற்றுவிட்டார்.

இந்தநிலையில், இளம் வயதில் ஊராட்சி தலைவர்களாக தேர்வானவர்களுக்கென தனியாக பாராட்டு விழாவுக்கு குஜராத் அரசு ஏற்பாடு செய்துள்ளது. இவ்விழாவில் குஜராத் முதல்வர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, தேர்தலில் வெற்றி பெற்ற இளைஞர்களை கௌரவிக்கவிருக்கிறார்.

இதற்காக அம்மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள இளம் ஊராட்சி தலைவர்களை தேர்ந்தெடுக்கும் பணி நடைபெற்றுள்ளது. அப்போது, அஃப்ரோஸ்பானு சிபாயின் பள்ளி இறுதி வகுப்புச் சான்றிதழை அதிகாரிகள் சரிபார்த்துள்ளனர். அதில் அஃப்ரோஸ்பானு சிபாய்க்கு 19 வயதே நிரம்பியுள்ள நிலையில், அவர் தேர்தலில் போட்டியிட்டதும் அதில் வெற்றி பெற்றதும் அதிகாரிகளின் கவனத்திற்கு வந்துள்ளது.

தேர்தல் விண்ணப்ப படிவத்தில் தமது வயதை 21 என்று அஃப்ரோஸ்பானு சிபாய் குறிப்பிட்டிருந்ததால் அவரது வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவ்விவகாரத்தில் அனைத்து விவரமும் சேகரிக்கப்பட்டு ஆவணங்கள் அனைத்தும் மாவட்ட ஆட்சியருக்கும் மாநில தேர்தல் ஆணையத்துக்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் ஆணையம் இறுதி முடிவை எடுக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

எனினும், இது குறித்து அஃப்ரோஸ்பானு சிபாய் சொல்வதென்ன? ‘தேர்தல் விண்ணப்ப படிவத்தில் வேட்பாளரின் வயதை மட்டுமே குறிப்பிடும்படி கேட்டிருந்ததால், தனது ஆதார் அட்டையில் உள்ள வயதை கணக்கிட்டு 21 என்று எழுதி பூர்த்தி செய்து கொடுத்ததாகவும். அதனைத்தொடர்ந்து தனது வேட்பு மனு நிராகரிக்கப்படாததால் தேர்தலில் போட்டியிட்டதாகவும். இப்போது தனக்கு ஊராட்சி தலைவர் பதவி கிடைத்துவிட்டதால் அதனை விட்டு விலக மாட்டேன்’ என்று வாதிடுகிறார்.

Underage Sarpanch elected in Gujarat: 19-year-old's victory exposes election blunder

கைப்பேசி தொலைந்ததால் ஏற்பட்ட வாக்குவாதம்: நண்பரை 5-வது மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்த நபர் கைது

கைப்பேசி காணாமல் போனது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் நண்பரை கட்டடத்தின் 5ஆவது மாடியில் இருந்து தள்ளி கொலை செய்த நபரைக் போலீஸார் கைது செய்தனர். உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஆக்ரா மாவட்டத்தைச் சேர்ந்த ஆ... மேலும் பார்க்க

இந்தியாவில் ஏழைகள் அதிகரிப்பு! உலக வங்கிக்கு எதிராக மத்திய அமைச்சர் பேச்சு!

இந்தியாவில் வருமான சமத்துவம் முன்னேறி வருவதாக உலக வங்கி அறிக்கைக்கு எதிர்மாறாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கருத்து தெரிவித்துள்ளார்.நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சர் நிதின் ... மேலும் பார்க்க

பாஜகவில் இணைந்த முன்னாள் குடியரசு துணைத் தலைவர் பேரன்!

முன்னாள் குடியரசு துணைத் தலைவரும் மறைந்தவருமான கிருஷண்காந்தின் பேரன் விராட் காந்த் பாஜகவில் இணைந்தார்.தில்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் கட்சியின் தேசிய பொதுச்செயலர் தருண் சுக், பஞ்சாப் பாஜக தலைவர் சுன... மேலும் பார்க்க

தொழிலாளர்களின் தினசரி வேலைநேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு! தெலங்கானா அரசு உத்தரவு

தெலங்கானாவிலும் நாளொன்றுக்கு 10 மணி நேரம் வேலை என்கிற முறை அமலாகிறது.தெலங்கானா அரசு சனிக்கிழமை(ஜூலை 5) பிறப்பித்துள்ள உத்தரவில் வணிக நிறுவனங்களில்(கடைகளுக்குப் பொருந்தாது) தொழிலாளர்களின் வேலை நேரம் நா... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியின் ஒரு சுவரில் பெயின்ட் அடிக்க 233 தொழிலாளர்கள்; 4 கதவுகளுக்கு 425 பேர்!

மத்தியப் பிரதேசத்தில் அரசுப் பள்ளிகளில் பெயின்ட்டுக்காக செலவிடப்பட்டதாக வெளியிடப்பட்ட கட்டண விவரங்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளது.மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் ஷாஹ்தோல் மாவட்டம், சாகண்டி கிராமத்தில் ஓர் ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: பயணி தவறவிட்ட ரூ.3.2 லட்சம் பணத்தை ஒப்படைத்த ரயில்வே போலீஸார் !

மகாராஷ்டிரத்தில் உள்ளூர் ரயிலில் பயணி தவறவிட்ட பையை மீட்டு அதன் உரிமையாளருக்கு திருப்பி அனுப்பியதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த அபிஷேக் சுக்லா (30) சர்ச்கேட் செல்... மேலும் பார்க்க