கேப்டன் ஷுப்மன் கில் அபாரம்; இங்கிலாந்துக்கு 608 ரன்கள் இலக்கு!
அரசுப் பள்ளியின் ஒரு சுவரில் பெயின்ட் அடிக்க 233 தொழிலாளர்கள்; 4 கதவுகளுக்கு 425 பேர்!
மத்தியப் பிரதேசத்தில் அரசுப் பள்ளிகளில் பெயின்ட்டுக்காக செலவிடப்பட்டதாக வெளியிடப்பட்ட கட்டண விவரங்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் ஷாஹ்தோல் மாவட்டம், சாகண்டி கிராமத்தில் ஓர் அரசுப் பள்ளியின் சுவரில் வண்ணப்பூச்சுக்காக 233 தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டதாகவும், நிபானியா என்ற மற்றொரு கிராமத்தில் அரசுப் பள்ளியில் 10 ஜன்னல்கள் மற்றும் 4 கதவுகளுக்கு வண்ணப்பூச்சு மேற்கொள்ள 425 தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டதாகவும், அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய கட்டண விவரங்களும் சமூக ஊடகங்ளில் வெளியாகியுள்ளன.
சாகண்டி பள்ளியின் ஒரு சுவருக்காக 65 கொத்தனார்கள் உள்பட 233 தொழிலாளர்களுடன் 4 லிட்டர் பெயின்ட் செலவிடப்பட்டதாகவும், வேலைக்கான கட்டணமாக ரூ. 1.07 லட்சம் செலவு வந்ததாக கட்டண விவரம் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமின்றி, நிபானியா பள்ளியில் 10 ஜன்னல்கள் மற்றும் 4 கதவுகளுக்காக 150 கொத்தனார்கள் உள்பட 425 தொழிலாளர்களுடன் 20 லிட்டர் பெயின்ட் செலவிடப்பட்டு, அதன் கட்டணமாக ரூ. 2.3 லட்சமாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.
இவையனைத்தும் அம்மாநில சட்டப்பேரவையின் மசோதாவில் அளிக்கப்பட்ட கட்டண விவரங்கள் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்த 2 பள்ளிகளின் கட்டணச் சீட்டுகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவில் வெளிவரும் உண்மைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கல்வி அதிகாரி தெரிவித்தார்.