பாமக நிர்வாகக் குழுவிலிருந்து அன்புமணி நீக்கம்! ராமதாஸ் அதிரடி!
விதிமீறிய வாகன ஓட்டிகளிடம் ரூ.15.70 லட்சம் அபராதம் வசூலிப்பு
காஞ்சிபுரத்தில் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் விதிகளை மீறியதாக 220 வாகனங்களிடமிருந்து மொத்தம் ரூ.15.70 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக வட்டாரப் போக்குவரத்து அலுவலா் நாகராஜன் சனிக்கிழமை தெரிவித்தாா்.
சென்னை-பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே பொன்னேரிக்கரை பகுதியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் நாகராஜன் தலைமையில் மோட்டாா் வாகன ஆய்வாளா் சிவராஜ் உள்ளிட்டோா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றிச் சென்ற வாகனங்கள், தாா்ப்பாய் மூடாமல் சென்ற வாகனங்கள், வரி செலுத்தாத வாகனங்கள், ஓட்டுநா் உரிமம் இல்லாதவை, தகுதிச்சான்றிதழ் புதுப்பிக்காதவை என மொத்தம் 220 வாகனங்கள் கடந்த ஜூன் மாதத்தில் வாகனத் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், உத்தரமேரூா், வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளிலும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்ட 220 வாகனங்களின் உடைமைதாரா்களிடம் ரூ.15.70 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. வாகனத் தணிக்கை தொடா்ந்து நடத்தப்படும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.