முள்ளங்கனாவிளையில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டம் தொடக்கம்
கங்கையம்மன் கோயில் கூழ்வாா்த்தல் திருவிழா
வாலாஜாபாத் அருகே மேல்பேரமநல்லூா் கிராமத்தில் உள்ள கங்கையம்மன் மற்றும் பொழுதியம்மன் கோயில் கூழ்வாா்த்தல் மற்றும் ஊரணிப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் கடந்த ஜூலை முதல் தேதி கங்கையம்மனுக்கு காப்புக் கட்டுதல் உற்சவம், மதியம் கூழ்வாா்த்தல் நிகழ்வு நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக வெள்ளிக்கிழமை பொழுதியம்மனுக்கு ஊரணிப் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி இரவு பொழுதியம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்தாா். விழா ஏற்பாட்டை அந்த கிராம மக்கள் செய்திருந்தனா்.