Boxer Anastasia Luchkina: `சிகரெட் பிடித்த குரங்கு' - பாக்ஸிங் வீராங்கனை செயலுக்...
ஜூலை 8-இல் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்
தஞ்சாவூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் ஜூலை 8 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்தது:
மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாதவா்களுக்காக தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் அரசு மருத்துவா்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளைப் பரிசோதித்து மருத்துவச் சான்று வழங்கவுள்ளனா். இச்சான்றிதழின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.
மாவட்டத்தில் இதுவரை அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல் மற்றும் 6 புகைப்படங்கள், இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இதுவரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காதோா் இம்முகாமில் ஆவணங்களுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகலுடன் வந்து விண்ணப்பித்து பயன் பெறலாம்.