செய்திகள் :

Boxer Anastasia Luchkina: `சிகரெட் பிடித்த குரங்கு' - பாக்ஸிங் வீராங்கனை செயலுக்கு கடும் எதிர்ப்பு!

post image

ரஷ்யாவைச் சேர்ந்த பாக்ஸிங் வீராங்கனை அனஸ்தேசியா லுச்கினா (Anastasia Luchkina) கிரிமியாவில் உள்ள டைகன் சஃபாரி பார்க் என்ற வன விலங்கு பூங்காவில் ஓராங்குட்டான் குரங்குக்கு ஈ-சிகரெட் புகைக்கக் கொடுத்தது கடுமையான எதிர்ப்புகளைப் பெற்றுள்ளது.

ரஷ்ய செய்திதளம் zamin.uz கூறுவதன்படி, ஈ-சிகரெட் புகைத்த குரங்கு அதனால் தொந்தரவுக்குள்ளாகி விசித்திரமாக நடந்துகொண்டுள்ளது.

Boxer Anastasia Luchkina

டானா என்ற அந்த ஓராங்குட்டான், பசி மறந்து, மற்ற குரங்குகளுடன் விளையாடாமல் ஒரே இடத்தில் கிடந்துள்ளது.

டானா குரங்குடன் சிகரெட்டைப் பகிர்ந்துகொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் குரங்கு சிலமுறை சிகரெட் புகைத்துவிட்டு மீண்டும் மீண்டும் கேட்பதைப் பார்க்க முடிகிறது.

2018ம் ஆண்டு முதல் டானா அந்த பூங்காவில் வளர்ந்துவருகிறது. இந்த சம்பவத்துக்குப் பிறகு கால்நடை மருத்துவர்கள் டானாவை சோதித்துள்ளனர்.

IUCN-ம் அழிந்து வரும் உயிரினங்களுக்கான சிவப்பு பட்டியலில் ஓராங்குட்டான் இனத்தைச் சேர்ந்த டானா குரங்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பாக்ஸிங் வீராங்கனையின் செயலை உலகம் முழுவதிலுமிருந்து விலங்குநல ஆர்வலர்கள் கண்டித்துள்ளனர்.

Custodial Death: ``நானும் அம்மாவும் அழுதுகொண்டே இருக்கிறோம்" - முனைவர் நிகிதா வெளியிட்ட ஆடியோ!

தமிழகத்தை உலுக்கிக்கொண்டிருக்கும் அஜித் குமார் மரணம் தொடர்பான பரபரப்பு தகவல்கள் வந்துக்கொண்டிருக்கின்றன. நீதிமன்றம் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகிறது. இதற்கிடையில், அஜித்குமார் மீது காவல் நிலைய... மேலும் பார்க்க

``ChatGPT உதவியால் ரூ.10 லட்சம் கடனை அடைத்துவிட்டேன்..'' - குடும்பத் தலைவியின் அனுபவப் பகிர்வு!

இப்போதைய உலகின் மந்திரச் சொல் 'AI, ChatGPT'. இதை முறையாகவும், சரியாகவும் பயன்படுத்தினால், நம்முடைய தினசரி நாளில் வெற்றிகரமான பல காரியங்களை சாதித்துக்கொள்ள முடியும். இதை அன்றாட தேவைகளுக்கு மட்டுமல்ல, ந... மேலும் பார்க்க

மகனுக்கு நகைகள் போட்டு அழகு பார்த்து உயிரை மாய்த்த குடும்பம்.. சொத்து பிரச்னையால் சோகம்

ராஜஸ்தானில் சொத்து பிரச்னையால் ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்டுள்ளது. அங்குள்ள பார்மர் என்ற இடத்தை சேர்ந்தவர் சிவ்லால்(35). இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு பஜ்ரங்(9), ராம்தேவ்(8) ஆகிய இரண்டு மகன்கள்... மேலும் பார்க்க

``ஸ்விட்ச், குழாய், எங்கும் எதிலும் தங்கம் தான்!'' - அரசு ஒப்பந்ததாரரின் தங்க வீடு.. வைரலான வீடியோ

அரசு ஒப்பந்ததாரர் என்றாலே பணம் தாராளமான புரளும். அதுவும் ஆளும் கட்சி அரசு ஒப்பந்தாரர் என்றால் சொல்லவேண்டாம். மத்திய பிரதேசத்தில் அரசு ஒப்பந்தாரர் அனூப் அகர்வால் என்பவர் புதிதாக மிகவும் கலைநயத்தோடு இந்... மேலும் பார்க்க

``I love U சொன்னது பாலியல் நோக்கமல்ல..'' - சிறை தண்டனையை ரத்து செய்த மும்பை உயர்நீதிமன்றம்!

நாக்பூர் கட்டோலைச் சேர்ந்த 25 வயது இளைஞர், 17 வயது சிறுமியின் கைகளை பிடித்து இழுத்து ’ஐ லவ் யூ’ சொன்னதற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு 2017 ஆம் ... மேலும் பார்க்க

குடிபோதையில் ஸ்பூனை விழுங்கிய நபர்; கனவில் விழுங்கியதாக புலம்பல்.. எண்டோஸ்கோபி மூலம் அகற்றம்

தாய்லாந்தில் 29 வயதான நபரின் வயிற்றிலிருந்த கரண்டியை மருத்துவர்கள் அப்புறப்படுத்தி உள்ளனர். இந்த கரண்டி எப்படி அவரது வயிற்றுக்குள் சென்றது என்று அவர் கூறும் காரணம் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தாய்லாந்து... மேலும் பார்க்க