செய்திகள் :

கும்பகோணம் அருகே பர்னிச்சர் கடையில் தீ: ரூ.1 கோடி மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்

post image

கும்பகோணம் அருகே பர்னிச்சர் கடையில் சனிக்கிழமை அதிகாலை திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.

கும்பகோணம் பாபநாசம் திருவிடைமருதூர் மற்றும் வலங்கைமான் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்திருந்த தீயணைப்பு படை வீரர்கள் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சாக்கோட்டை ஒத்த தெருவில் ராஜா என்பவர் சொந்தமாக பர்னிச்சர் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு வீடுகள், அலுவலகங்களுக்கு தேவையான பல்வேறு வகையான பொருள்கள் உள்ளது. இதில் பிளைவுட், ரெக்சின், போன்ற எளிதில் தீப்பற்ற கூடிய பொருள்கள் இருந்தன.

இந்த நிலையில், வழக்கம் போல் வெள்ளிக்கிழமை மாலை வேலை முடிந்ததும் உரிமையாளர் ராஜா கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். சனிக்கிமை அதிகாலை பர்னிச்சர் கடையில் கரும்புகை கிளம்பி உள்ளது. இதையடுத்து அருகில் இருந்தோர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

கடையில் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்கள் இருந்ததால் தீ மளமளவென கடை முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

தீயை அணைக்கு பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரர்கள்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கும்பகோணம் தீயணைப்புத் துறை வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை உடனடியாக கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் போராடினர்.

பின்னர் பாபநாசம், திருவிடைமருதூர் மற்றும் வலங்கைமான் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தீயணைப்புத் துறையினர் கூறினர்.

மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் எனவும், இதில் ரூ.1 கோடி மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.

நடுரோட்டில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்: நல்வாய்ப்பாக உயிர் தப்பிய உரிமையாளர்!

Goods worth Rs. 1 crore were destroyed in a massive fire that broke out at a furniture shop near Kumbakonam early Saturday morning.

நடுரோட்டில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்: நல்வாய்ப்பாக உயிர் தப்பிய உரிமையாளர்!

கோவை: கோவையில் நடுரோட்டில் திடீரென தீப்பற்றி எரிந்த காரியில் இருந்த உரிமையாளர் நல்வாய்ப்பாக உயிா் தப்பினாா். பெட்ரோலில் இருந்து எரிவாயுக்கு மாற்றிய போது தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.க... மேலும் பார்க்க

அதிமுக தலைமையில்தான் கூட்டணி; நானே முதல்வர் வேட்பாளர்! - இபிஎஸ்

2026 தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் நானே முதல்வர் வேட்பாளர் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுக பொதுச் செயலரும் எதிர்க்கட்சித் தலைவ... மேலும் பார்க்க

ஜூலை 7 இல் சோளிங்கர் வட்டத்துக்கு உள்பட்ட பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை

சோளிங்கர் யோக ஆஞ்சநேயர் கோயில் குடமுழுக்கையொட்டி ஜூலை 7 ஆம் தேதி(திங்கள்கிழமை) சோளிங்கர் வட்டத்துக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அருள்... மேலும் பார்க்க

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

மூத்த தமிழறிஞா் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் (91) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் வெள்ளிக்கிழமை (ஜூலை 4) காலமானாா். அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.ராமநாதபுரம் மாவட... மேலும் பார்க்க

பட்டாசு ஆலை வெடிவிபத்து... தொடரும் உயிரிழப்பு!

சாத்தூா் அருகேயுள்ள சின்னக்காமன்பட்டி பட்டாசு ஆலையில் நேரிட்ட வெடி விபத்தில் , காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி அழகு ராஜா சனிக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் ... மேலும் பார்க்க

தங்கம் விலை மீண்டும் உயர்வு: இன்று எவ்வளவு உயர்ந்தது தெரியுமா?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.440 குறைந்து ரூ.72,400-க்கு விற்பனையான நிலையில், சனிக்கிழமை பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.72,480-க்கு விற்பனையாகிறது.ஆண்டு தொடக்கம் ... மேலும் பார்க்க