India US Tariff - ஷாக் கொடுத்த இந்தியா பணியுமா அமெரிக்கா? WTO | Trump | Trade De...
டென்னிஸ் ராக்கெட் இழைநார்களினால் தோல்வி..! எம்மா ரடுகானு விரக்தி!
புல்தரை கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில் மூன்றாவது சுற்றில் தோல்வியுற தனது டென்னிஸ் - ராக்கெட்டின் இழைநார்கள் (strings) கோளாறாக இருந்தது ஒரு காரணம் என எம்மா ரடுகானு கூறியுள்ளார்.
மகளிர் ஓபன் பிரிவில் 3-ஆவது சுற்றில் உலகின் நம்.1 வீராங்கனையாக சபலென்காவும் இங்கிலாந்தின் நம்.1 வீராங்கனை எம்மா ரடுகானுவும் மேல்தளம் மூடப்பட்ட சென்டர் கோர்ட்டில் மோதினார்கள்.
இந்தப் போட்டியில் சபலென்கா 7-6 (6) 6-4 என த்ரில் வெற்றி பெற்றார்.
இதில் எம்மா ரடுகானு தோல்வியுற்றாலும் பெரும்பாலும் வெற்றிபெறும் இடத்திலிருந்து சில மில்லி மீட்டர்களில் தோல்வியுற்றார். இந்தத் தோல்வி குறித்து எம்மா ரடுகானு பேசியதாவது:
இறுக்கமான இழைநார்களினால் விரக்தியடைந்தேன்
பந்துகள் அதிகமாக பறந்ததாக உணர்ந்தேன். எனது அனைத்து டென்னிஸ் ராக்கெட்டுகளும் போட்டிக்காக புதியதாக இழைநார்களை பின்னக் கொடுத்திருந்தேன்.
ராக்கெட்டில் இழைநார்கள் இறுக்கமாக பின்னப்பட்டதாதயார் செய்யப்பட்டிருந்தது. அது இந்தப் போட்டிக்கு முற்றிலும் வித்தியாசமாக அமைந்துவிட்டது.
திடலில் கூரை மூடப்பட்டிருந்ததால் அப்படி மாறியிருக்கலாம். நான் 2 ராக்கெட்டுகளின் கம்பிகளை தளர்வாக அமைக்கும்படி அனுப்பினேன்.
அவர்கள் அதை மாற்றுவதற்கு 20 நிமிடங்கள் ஆகின. இருந்தும் எனக்கு கடினமாக இருந்தது. எனக்கு இதெல்லாம் விரக்தியை உண்டாக்கியது. ஆனால், எனக்கு வேறு வழியில்லை. நான் சரியாக விளையாடியிருக்க வேண்டும் என்றார்.

எம்மா ரடுகானுவின் சிறப்பான ஆட்டத்துக்கு திடலில் இருந்த அனைவருமே எழுந்து நின்று கைதட்டினார்கள்.