மீண்டும் முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை !
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணை நீர் மட்டம் நடபாண்டில் இரண்டாவது முறையாக 120 அடி எட்டியது.
மேட்டூர் அணை வரலாற்றில் 44வது முறையாக அதன் முழு கொள்ளளவு 120 அடியை கடந்த 29 ஆம் தேதி எட்டியது. அதன் பிறகு நான்கு நாள்களாக நீர் மட்டம் 120 அடி நீடித்து வந்தது. அதன் பிறகு கடந்த 3 ஆம் தேதி மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்ததால் நீர் மட்டம் 119 அடியாக குறைந்தது.
இந்த நிலையில் மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று இரவு 8 மணி அளவில் 120 அடியாக மீண்டும் உயர்ந்தந்துள்ளது. மேட்டூர் அணை கட்டப்பட்டு 92 ஆண்டு கால வரலாற்றில் 45 வது முறையாக மேட்டூர் அணை 120 அடியை எட்டியுள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று வினாடிக்கு 53,205 கன அடியிலிருந்து 53,027 கன அடியாக குறைந்துள்ளது. நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.உள்ளது. அணையிலிருந்து காவிரி ஆற்றில் 40,000 கன அடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.
கேப்டன் ஷுப்மன் கில் அபாரம்; இங்கிலாந்துக்கு 608 ரன்கள் இலக்கு!
The Mettur Dam in Tamil Nadu, India, reached its full capacity of 120 feet for the second time in a row due to increased water inflow.