இன்னமும் நீதிபதி இல்லத்தை காலி செய்யாத சந்திரசூட்; மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற...
சங்கரன்கோவிலில் பிளாஸ்டிக் கழிவுகளில் தீ!
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் புதிய பேருந்து நிலையம் அருகே குவிக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கழிவுகள் தீ பிடித்து எரிந்தன.
சங்கரன்கோவில் புதிய பேருந்து நிலையம் அருகே பிளாஸ்டிக் நிறுவனம் உள்ளது. இந்நிறுவனத்தின் அருகில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் குவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இந்த கழிவுகள் திடீரென தீ பற்றி எரிந்தன. இதனால் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்தது. தகவல் அறிந்ததும் சங்கரன்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலா் செல்வன் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் சென்று தீ மேலும் பரவவிடாமல் அணைத்தனா்.