செய்திகள் :

இன்னமும் நீதிபதி இல்லத்தை காலி செய்யாத சந்திரசூட்; மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடிதம் - பின்னணி?

post image

முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட், இன்னமும் அவருக்கு ஒதுக்கப்பட்ட 8-வது வகை பங்களாவில் இருந்து காலி செய்யாதது குறித்து உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது.

2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் சந்திரசூட் ஓய்வுப்பெற்றார். விதிமுறைகளின் படி, தலைமை நீதிபதிக்கு 8-வது வகை பங்களாக்கள் ஒதுக்கப்படும். அவரது ஓய்விற்கு பிறகு, அடுத்த ஆறு மாதங்களுக்கு, வாடகையற்ற 7-வகை பங்களாவிற்கு மாற்றப்படுவார்கள்.

முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்
முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்

பின்னணி என்ன?

ஆனால், சந்திரசூட் ஓய்வு பெற்றப் பிறகும் கூட, 8-வகை பங்களாவிலேயே தங்கி வருகிறார். காரணம், அவருக்கு பிறகு, தலைமை நீதிபதி பொறுப்பேற்ற சஞ்சீவ் கன்னா மற்றும் கவாய் அவர்கள் முன்பு இருந்த வீட்டிலேயே இருந்துகொள்வதாக கூறிவிட்டனர்.

சந்திரசூட்டும் ஓய்வு பெற்ற ஒரு மாதத்திற்கு பிறகு, 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை, டெல்லி கிருஷ்ண மேனன் சாலையில் உள்ள அதே வீட்டில் தங்கி கொள்ள அனுமதி கேட்டிருந்தார்.

அதற்கு ஒப்புக்கொண்ட மத்திய அரசு, அவருக்கு மாதம் ரூ.5,430 லைசன்ஸ் ஃபீஸாக வாங்கி வருகிறது.

இடையில், கால அவகாச நீட்டிப்பிற்கு மேல் நீட்டிப்பு கேட்டு, இன்னமும் சந்திரசூட் அந்த இல்லத்தில் இருந்து காலி செய்யவில்லை.

இது குறித்து கடந்த ஜூலை 1-ம் தேதி உச்ச நீதிமன்றம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது...
முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்
முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்

"மேலும் கால தாமதம் இல்லாமல், சந்திரசூட் அவரது பங்களாவை காலி செய்ய வழி செய்ய வேண்டும். அவர் கேட்ட நீட்டிப்பு கடந்த மே 31-ம் தேதியுடனே முடிந்துவிட்டது. மேலும், 2022, விதிமுறை 3B-ன் படி, அவரது கால அவகாசம் மே 10-ம் தேதியோடு முடிந்தது".

இதற்கு சந்திரசூட்டின் பதில்...

"கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து வீடு தேடி வருகிறேன். என்னுடைய மாற்று திறனாளி மகள்களுக்கு ஏற்றவாறு சர்வீஸ் அப்பார்ட்மென்ட், ஹோட்டல்களைப் பார்த்தும் கூட, அது ஒத்துவர வில்லை.

அரசு எனக்கு ஆறு மாதங்களுக்கு வாடகை வீடு ஒன்றை ஏற்பாடு செய்தது. அதில் வேலை நடந்துகொண்டிருக்கிறது. அது முடிந்ததும் அங்கே சென்றுவிடுவோம்".

`2026 தேர்தலில் கரூரில் நான்கு தொகுதிகளிலும் திமுக வெல்லும்!' - செந்தில் பாலாஜி ஆருடம்

கரூர் திருமாநிலையூர் பகுதியில் ரூ. 40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ ஆய்வு செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செந்தில் ... மேலும் பார்க்க

`ஆட்சி, அமைச்சரவையில் பங்கு வேண்டும்'-செல்வப்பெருந்தகையிடம் வலியுறுத்திய காங்., சட்டசபை குழு தலைவர்!

காங்கிரஸ் கட்சி சார்பில் அரசியல் அமைப்பை காப்போம் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் மற்றும் நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி கன்னியாகுமரியில் நடந்தது. காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை... மேலும் பார்க்க

'அப்போது கூறியது...' - எக்ஸ் தளத்தில் ராய்ட்டர்ஸ் முடக்கம் குறித்து மத்திய அரசு தரப்பு விளக்கம்

ராய்ட்டர்ஸ் (Reuters) என்னும் சர்வதேச செய்தி நிறுவனத்தின் எக்ஸ் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து எக்ஸ் தளத்தில், 'சட்டப்பூர்வமான கோரிக்கைக்கு ஏற்ப இந்தப் பக்கம் முடக்கப்பட்டுள்ளது' எ... மேலும் பார்க்க

குழந்தை பெறும் பள்ளி மாணவிகளுக்கு ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை - ரஷ்யா புதிய திட்டம்!

ரஷ்யாவில் பிறப்பு விகிதம் சரிந்து வருகிறது. இதை அதிகரிக்க ரஷ்யாவின் சில பகுதிகளில் புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. அதன் படி, குழந்தை பெற்றுக்கொள்ளும் பள்ளி மாணவிகளுக்கு 1 லட்சம் ரூபிள... மேலும் பார்க்க

'அன்புமணி பெயர் இல்லை...' - ராமதாஸ் வெளியிட்ட நிர்வாக குழு பட்டியல்!

பாமக நிறுவனர் ராமதாஸ் புதிதாக 21 பொறுப்பாளர்களை நியமித்து நிர்வாக குழு பட்டியலை வெளியிட்டிருக்கிறார். ஆனால், அந்தப் பட்டியலில், அன்புமணியின் பெயர் இடம்பெறவில்லை. பாமக நிறுவனர் ராமதாஸிற்கும், பாமக தலைவ... மேலும் பார்க்க

"முதல்வராக ஸ்டாலின் வரவேண்டும் என்று ஆசைப்படுகிறோம், அதே நேரம்..."- பீட்டர் அல்போன்ஸ் சொல்வது என்ன?

கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் கிராம கமிட்டி நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சியி... மேலும் பார்க்க