செய்திகள் :

'அன்புமணி பெயர் இல்லை...' - ராமதாஸ் வெளியிட்ட நிர்வாக குழு பட்டியல்!

post image

பாமக நிறுவனர் ராமதாஸ் புதிதாக 21 பொறுப்பாளர்களை நியமித்து நிர்வாக குழு பட்டியலை வெளியிட்டிருக்கிறார்.

ஆனால், அந்தப் பட்டியலில், அன்புமணியின் பெயர் இடம்பெறவில்லை.

பாமக நிறுவனர் ராமதாஸிற்கும், பாமக தலைவர் அன்புமணிக்கும் கடந்த ஆண்டின் இறுதியில் இருந்து மோதல்போக்கு நிலவி வருகிறது.

இருவரும் மாறி மாறி நிர்வாகிகளை நீக்குவதும், நியமிப்பதுமாக இருந்து வருகின்றனர்.

ராமதாஸ், அன்புமணி
ராமதாஸ், அன்புமணி

கலைத்த ராமதாஸ்

கடைசியாக, பாமக தலைவர் பதவியில் மூச்சிருக்கும் வரை, நானே தொடர்வேன் என்று ராமதாஸ் அறிவித்திருந்தார்.

முன்பு, பாமகவில் தலைமை நிர்வாக குழு செயல்பட்டு வந்தது. ராமதாஸ் - அன்புமணிக்கு இடையே நடந்துவரும் மோதலால், இந்தக் குழுவை ராமதாஸ் கலைத்து, புதிய நிர்வாக குழுவை அறிவித்துள்ளார்.

அதில் தான், அன்புமணியின் பெயர் இடம்பெறவில்லை.

பாமகவினர் நினைப்பது...

இருவருக்குள்ளும் சமாதானம் ஏற்பட வேண்டும். அப்போது தான் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் குறித்த கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று பாமகவினர் கருதுகிறார்கள்.

ஆனால், இவர்கள் இருவரின் மோதல் போக்கு தொடர்கதையாக நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.

'அப்போது கூறியது...' - எக்ஸ் தளத்தில் ராய்ட்டர்ஸ் முடக்கம் குறித்து மத்திய அரசு தரப்பு விளக்கம்

ராய்ட்டர்ஸ் (Reuters) என்னும் சர்வதேச செய்தி நிறுவனத்தின் எக்ஸ் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து எக்ஸ் தளத்தில், 'சட்டப்பூர்வமான கோரிக்கைக்கு ஏற்ப இந்தப் பக்கம் முடக்கப்பட்டுள்ளது' எ... மேலும் பார்க்க

இன்னமும் நீதிபதி இல்லத்தை காலி செய்யாத சந்திரசூட்; மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடிதம் - பின்னணி?

முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட், இன்னமும் அவருக்கு ஒதுக்கப்பட்ட 8-வது வகை பங்களாவில் இருந்து காலி செய்யாதது குறித்து உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது. 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் ... மேலும் பார்க்க

குழந்தை பெறும் பள்ளி மாணவிகளுக்கு ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை - ரஷ்யா புதிய திட்டம்!

ரஷ்யாவில் பிறப்பு விகிதம் சரிந்து வருகிறது. இதை அதிகரிக்க ரஷ்யாவின் சில பகுதிகளில் புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. அதன் படி, குழந்தை பெற்றுக்கொள்ளும் பள்ளி மாணவிகளுக்கு 1 லட்சம் ரூபிள... மேலும் பார்க்க

"முதல்வராக ஸ்டாலின் வரவேண்டும் என்று ஆசைப்படுகிறோம், அதே நேரம்..."- பீட்டர் அல்போன்ஸ் சொல்வது என்ன?

கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் கிராம கமிட்டி நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சியி... மேலும் பார்க்க

Reuters: ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் பக்கம் இந்தியாவில் முடக்கம்; காரணம் என்ன?

Reuters - இது பிரபலமான சர்வதேச செய்தி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் இந்தியாவின் எக்ஸ் பக்கம் தற்போது முடக்கப்பட்டுள்ளது. இது, 'சட்டப்பூர்வமான கோரிக்கை' என்கிற அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது. ஆனால்... மேலும் பார்க்க

'வன்னியர் சமுதாய மக்களும், பட்டியிலின மக்களும் இணைந்தால்..!' - ஆட்சி அமைப்பது குறித்து அன்புமணி

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர். அதில் பாமக தலைவர் ... மேலும் பார்க்க