செய்திகள் :

கால்பந்து உலகில் மீண்டும் சோகம்..! பயர்ன் மியூனிக் இளம் வீரர் மருத்துவமனையில் அனுமதி!

post image

கிளப் உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் பயர்ன் மியூனிக் வீரர் ஜமால் முசியாலா (22) பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் கிளப் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில், காலிறுதிப் போட்டியில் பிஎஸ்ஜி, பயர்ன் மியூனிக் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் முதல் பாதிக்கு முன்பாக பயர்ன் மியூனிக் வீரர் மிசியால கோல் அடிக்க எதிரணியின் கோல் போஸ்ட் அருகே ஓடும்போது பிஎஸ்ஜி அணியின் கோல் கீப்பர் டோனாரும்மா பந்தைப் பிடிக்க விழுவார்.

அந்தச் சமயத்தில் ஓடிவந்துக்கொண்டிருந்த முசியாலாவின் கால்கள் டோனாரும்மா உடலின் மீது மோதி கீழே விழுவார். கீழே விழுந்ததும் வலி தாங்காமல் முசியாலா அழுதது அனைத்து வீரர்களையும் நிலைகுலையச் செய்தது.

இந்த விபத்தில் முசியாலாவிற்கு ஃபைபுலா எனும் எழும்பில் முறிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

விரைவில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து குணமாக 4-5 மாதங்கள் ஆகுமெனக் கூறப்படுகிறது.

பிஎஸ்ஜி கோல் கீப்பர் டோனாரும்மா தனது இன்ஸ்டா பக்கத்தில் விரைவில் குணமாகி வரவேண்டுமென தான் அழும் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.

Donarumma's post
டோனாரும்மாவின் பதிவு

இரு அணிகளுமே முதல் பாதியில் கோல் அடிக்கவில்லை. பிஎஸ்ஜி அணியினர் இரண்டாம் பாதியில் டியூ 78-ஆவது நிமிஷத்திலும், டெம்பேலே 90+6-ஆவது நிமிஷத்திலும் கோல் அடித்தார்கள்.

சில நாள்களுக்கு முன்பு லிவர்பூல் வீரர் ஜோடா கார்விபத்தில் உயிரிழந்த சோகத்தில் மூழ்கியிருந்த கால்பந்து உலகில் இந்த நிகழ்வு கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Bayern Munich's Jamal Musiala is taken off the field after an injury during the Club World Cup quarterfinal soccer match between PSG and Bayern Munich in Atlanta.

ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாகும் விக்ரம் மகள்!

நடிகர் ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக நடிகை சாரா அர்ஜூன் நடிக்கவுள்ளார். துரந்தர் என்ற பெயரில் தயாராகிவரும் இப்படத்தில், சாரா அர்ஜூன் முதல்முறையாக ஹிந்தியில் நாயகியாக அறிமுகமாகிறார். 2011-ம் ஆண்டில் வெளிய... மேலும் பார்க்க

வாத்தி 2 இல்லை, லக்கி பாஸ்கர் 2 இருக்கு..! வெங்கி அட்லூரி பேட்டி!

இயக்குநர் வெங்கி அட்லூரி சமீபத்திய நேர்காணல் ஒன்றில் லக்கி பாஸ்கர் 2 படம் நிச்சயமாக எடுப்பேன் எனக் கூறியுள்ளார்.நடிகர் தனுஷின் வாத்தி படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான், மீனாட்ச... மேலும் பார்க்க

நவரசத்தில் ஐந்து... விஷ்ணு விஷால், ருத்ராவின் புரமோஷன் விடியோ!

நடிகர் விஷ்ணு விஷாலும் அவரது தம்பியும் இணைந்து செய்த புரமோஷன் விடியோ வைரலாகி வருகிறது. நடிகர் விஷ்ணு விஷால் தன்னுடைய தம்பி ருத்ராவை நாயகனாக அறிமுகப்படுத்துகிறார். ரோமியோ பிக்சர்ஸ், விஷ்ணு விஷால் இணைந்... மேலும் பார்க்க

மெஸ்ஸி மேஜிக்: 2 கோல்கள், 1 அசிஸ்ட்... மீண்டும் ஆட்ட நாயகன் விருது!

அமெரிக்காவில் நடைபெறும் எம்எல்எஸ் தொடரில் லியோனல மெஸ்ஸி (38 வயது) இரண்டு கோல்கள் அடித்து இன்டர் மியாமிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தார். கிளப் உலகக் கோப்பையில் இன்டர் மியாமி அணி பிஎஸ்ஜியுடன் ரவுண்ட் ஆஃ... மேலும் பார்க்க

ரஷ்மிகாவின் தி கேர்ள்பிரண்ட் படத்தின் முதல் பாடல் எப்போது?

ரஷ்மிகா மந்தனா நடித்துள்ள தி கேர்ள்பிரண்ட் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. நடிகை ரஷ்மிகா மந்தனா அனிமல், புஷ்பா திரைப்படங்களின் தொடர் வெற்றியால் நடிகை உச்ச நட்சத்திரமாக வளர்ந்துள்ளார்.தெலுங்குப... மேலும் பார்க்க