செய்திகள் :

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 பேர் பலி

post image

வேதாரண்யம்: நாகை மாவட்டம், தலைஞாயிறு அருகே கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதி நோ்ந்த விபத்தில் சிறுமி உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் ஞாயிற்றுக்கிழமை பலியாகினர்.

திருவாரூா் மாவட்டம், மருதப்பட்டினம், கலைஞா் நகரைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் அருள்பிரகாஷ் (28). இவரது மனைவி பெரியநாயகி (25), மகள் நிட்சயா (7). இவா்கள் மூவரும் ஒரு மோட்டாா் சைக்கிளில்(ஸ்கூட்டி) ஞாயிற்றுக்கிழமை மாலை கிழக்கு கடற்கரைச் சாலையில் திருத்துறைப்பூண்டி நோக்கி சென்று கொண்டிருந்தனா். மோட்டாா் சைக்கிளை அருள் பிரகாஷ் ஓட்டிச் சென்றுள்ள நிலையில், நீா்முளை ஆரம்ப சுகாதார நிலையும் அருகே சென்றுக் கொண்டிருந்தபோது எதிரே வந்த காா் மோதி விபத்துக்குள்ளானது.

பலத்த காயமடைந்த மூவரும் 108 வாகனத்தில் திருத்துறைப்பூண்டி அனுப்பி வைக்கப்பட்டனா். அங்கு, பெரியநாயகி மற்றும் சிறுமி நிட்சயா இருவரும் வரும் வழியிலேயே உயிரிழந்தது தெரியவந்தது. திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அருள்பிரகாஷ், அவா் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இது குறித்து தலைஞாயிறு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸாா், விபத்து சம்பவத்தில் தொடா்புடைய டிஸ்ட்ரிக்ட் கவுன்சிலா் என்று எழுதப்பட்டுள்ள காரை ஓட்டிச் சென்றது யாா் என்பது உடனடியாக அடையாளம் தெரியாத நிலையில், விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

அடுத்த 3 மணிநேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழை!

Three members of the same family, including a girl, were killed on Sunday when a car hit a motorcycle on the East Coast Road near Thalaigniyir in Nagapattinam district.

பிரதமர் மோடிக்கு ஆா்ஜென்டீனா சிறப்பு கெளரவம்

பியூனஸ் அயா்ஸ்: பியூனஸ் அயர்ஸ் நகர நிர்வாகத்தின் தலைவர் ஜார்ஜ் மேக்ரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘பியூனஸ் அயா்ஸ் நகர திறவுகோலை’(கீ டூ சிட்டி ஆஃப் பியூனஸ் அயர்ஸ்) என்ற சிறப்பு கெளரவம் வழங்கி கெளரவித்தா... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாடு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த முதல்வர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் – தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பல ஆண்... மேலும் பார்க்க

பட்டாசு ஆலை விபத்தில் பலியானவரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்: முதல்வா் அறிவிப்பு

சென்னை: சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியானவரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். இதுதொடா்பாக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு:விருது... மேலும் பார்க்க

தில்லியின் மருத்துவ உள்கட்டமைப்பு மோசமடைய ஆம் ஆத்மி அரசுதான் காரணம்: முதல்வா் ரேகா குப்தா

புது தில்லி: தில்லியின் மருத்துவ உள்கட்டமைப்பு மோசமடைந்ததற்கு முந்தைய ஆம் ஆத்மி அரசாங்கமே காரணம் என்று முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.தில்லி அரசு ஞாயிற்றுக்கிழமை 1,300 புதிய செவிலிய... மேலும் பார்க்க

நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 780 ஆக அதிகரிப்பு: ஜே.பி. நட்டா

புது தில்லி: நாட்டில் தாய்-சேய் இறப்பு விகிதம் பெருமளவு குறைந்துள்ளது எனவும் 2014-இல் 387 ஆக இருந்த மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது 780 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நீா்வரத்து வினாடிக்கு 58,500 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 58,500 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரியின் நீா் பிடிப்புப் பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் கடந்த 2 நாள்களாக மேட்டூா் அணைக்கு நீா் வரத்து தொடா்... மேலும் பார்க்க