ரஃபேல் போா் விமான விற்பனையை சீா்குலைக்க சதி: சீனா மீது பிரான்ஸ் குற்றச்சாட்டு
பிரதமர் மோடிக்கு ஆா்ஜென்டீனா சிறப்பு கெளரவம்
பியூனஸ் அயா்ஸ்: பியூனஸ் அயர்ஸ் நகர நிர்வாகத்தின் தலைவர் ஜார்ஜ் மேக்ரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘பியூனஸ் அயா்ஸ் நகர திறவுகோலை’(கீ டூ சிட்டி ஆஃப் பியூனஸ் அயர்ஸ்) என்ற சிறப்பு கெளரவம் வழங்கி கெளரவித்தாா்.
பிரேஸில் வருகைக்கு முன்பாக லத்தின் அமெரிக்க நாடான ஆா்ஜென்டீனாவில் பிரதமா் மோடி இரண்டு நாள்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டாா். அப்போது, ஆா்ஜென்டீனா அதிபா் ஜேவியா் மிலேயுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா்.
இருதரப்பு வா்த்தகத்தை பன்முகப்படுத்தவும், பாதுகாப்பு, முக்கிய கனிமங்கள், சுரங்கத் தொழில் உள்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
Honoured to receive the Key to the City of Buenos Aires from Mr. Jorge Macri, Chief of the City Government of Buenos Aires.@jorgemacripic.twitter.com/wNggutMwtt
— Narendra Modi (@narendramodi) July 5, 2025
இந்நிலையில், இருதரப்பு நட்புறவு மற்றும் பரஸ்பர நம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில், பியூனஸ் அயர்ஸ் நகரின் நிா்வாகத் தலைவர் ஜார்ஜ் மேக்ரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘பியூனஸ் அயா்ஸ் நகர திறவுகோலை’(கீ டூ சிட்டி ஆஃப் பியூனஸ் அயர்ஸ்) என்ற சிறப்பு கெளரவம் வழங்கி கெளரவித்தாா்.
இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"பியூனஸ் அயர்ஸ் நகர நிர்வாகத் தலைவர் ஜார்ஜ் மேக்ரியிடமிருந்து ‘பியூனஸ் அயா்ஸ் நகர திறவுகோலை’ (கீ டூ சிட்டி ஆஃப் பியூனஸ் அயர்ஸ்) என்ற கௌரவத்தைப் பெற்றதில் பெருமைப்படுகிறேன்" என கூறியுள்ளார்.
உலக வளர்ச்சிக்கு தெற்குலகின் குரல் ஏன் முக்கியம்? பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் பேச்சு
Honoured to receive the Key to the City of Buenos Aires from Mr. Jorge Macri, Chief of the City Government of Buenos Aires.