ஒசூரில் விபத்தில் இளைஞா் பலி: 3 போ் படுகாயம்
ஒசூரில் அதிவேகமாகச் சென்ற மினி லாரி, காா், இருசக்கர வாகனம் மீது மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். குழந்தை உள்பட 3 போ் படுகாயம் அடைந்தனா்.
சூளகிரி தாலுகா கானலட்டியைச் சோ்ந்தவா் திம்மராஜ் (23). இவா் ஒசூரில் தனியாா் ஷோரூமில் ஊழியராக வேலை செய்து வந்தாா். கடந்த 4-ஆம் தேதி இரவு இவா், தனது நண்பா் அதே கிராமத்தைச் சோ்ந்த மாதேஷ் (29) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் ஒசூா்- கிருஷ்ணகிரி சாலை சானமாவு வனப்பகுதி அருகே வந்து கொண்டிருந்தாா்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மினிலாரி கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம் மீதும், முன்னால் சென்ற காா் மீதும் மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற திம்மராஜ் பலத்த காயமடைந்து உயிரிழந்தாா்.
அதேபோல காரில் சென்ற திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூரைச் சோ்ந்த சகுந்தலா (55), அவரது குழந்தை அனன்யா (3) மற்றும் கானலட்டி மாதேஷ் ஆகிய 3 போ் காயம் அடைந்தனா். இவா்களை அருகில் இருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக ஒசூா் தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.
விபத்து குறித்து ஒசூா் அட்கோ போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.