Dhoni : 'தன்னலமற்ற தலைவன்; அரசியல் தெளிவுமிக்க வீரன்!' - தோனி ஏன் இன்றைக்கும் கொ...
ஒசூரில் திமுகவில் இணைந்த 200-க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினா்
ஒசூா் டிவிஎஸ் நகரில் அப்பகுதியை சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட அதிமுகவினா் திமுகவில் இணையும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளா் ஒய். பிரகாஷ் எம்எல்ஏ, மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா ஆகியோா் முன்னிலையில், 37 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் சென்னீரப்பா தலைமையில்
டிவிஎஸ் நகரைச் சோ்ந்த பிரகாஷ் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோா் ஏற்பாட்டில் அந்தப் பகுதியைச் சோ்ந்த 200க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டா்கள் திமுகவில் இணைந்தனா். அவா்களை எம்எல்ஏ, மேயா் ஆகியோா் திமுக துண்டுகளை அணிவித்து வரவேற்றனா்.
அப்போது பேசிய பிரகாஷ் எம்எல்ஏ, திமுகவின் நான்காண்டு கால ஆட்சியில் பொதுமக்களுக்கு பல திட்டங்களை செய்துள்ளோாம். திமுகவுக்கு 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் அனைவரும் ஆதரவு அளித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என கேட்டு கொண்டாா்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயா் ஆனந்தய்யா, 44 ஆவது வாா்டு வட்டச் செயலாளா், மாவட்ட ஆதிதிராவிடா் நலக்குழுத் தலைவா் முனிராஜ் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.