தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் எடப்பாடி பழனிசாமி
2026 சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தை அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கோவையில் இருந்து தொடங்கினார்.
இசட் பிளஸ் பாதுகாப்புடன் கோவை வந்த அவருக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து மேட்டுப்பாளையம் தொகுதி தேக்கம்பட்டியில் அமைந்துள்ள வனப்பத்திரகாளியம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். அப்போது முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தொடர்ந்து, 10.30 மணியளவில் விவசாயிகளைச் சந்தித்து அவர் பேசவுள்ளார். அடுத்ததாக, பிளாக் தண்டர் செல்லும் எடப்பாடி பழனிசாமி, மாலை 4.35 மணியளவில் பிளாக் தண்டர் முதல் ஊட்டி சாலை காந்தி சிலை வரையில் ரோடு ஷோவும் செல்கிறார். இறுதியாக, மேட்டுப்பாளையம் பேருந்து நிலைய சந்திப்புக்கு அவர் செல்கிறார்.

மேற்குறிப்பிட்ட 5 இடங்களிலும் மக்களைச் சந்தித்து, பிரசார வாகனத்தில் இருந்தவாறே எடப்பாடி பழனிசாமி உரையாற்றவுள்ளார். மேட்டுப்பாளையத்தில் தொடங்கிய மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணம் என்கிற அவரின் சுற்றுப்பயணம் ஜூலை 23ஆம் தேதி பட்டுக்கோட்டையில் நிறைவடைகிறது.
2024 மக்களவைத் தோ்தல் தோல்வியில் இருந்து மீண்டு, மீண்டும் ஒரு வெற்றிக்கான எழுச்சியை எடப்பாடி கே.பழனிசாமியின் பிரசாரம் ஏற்படுத்துமா என்பதை அரசியல் நோக்கா்கள் கூா்ந்து கவனித்து வருகிறாா்கள்.
AIADMK General Secretary Edappadi Palaniswami launched the 2026 Assembly election campaign from Coimbatore.