செய்திகள் :

விஜய் சேதுபதியின் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

post image

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று(ஜூலை 7) தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான 'மகாராஜா’ மற்றும் ’விடுதலை - 2ம் பாகம்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் அவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்தன.

இதனிடையே, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தின் இயக்குநர் பி.ஆறுமுகக் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த அவரது 51-வது படமான ஏஸ் (Ace) படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

தொடர்ந்து, இயக்குநர் மிஷ்கினின் டிரெயின் படத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக தலைவன் தலைவி வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து இயக்குநர் மிஷ்கினின் டிரெயின் படமும் திரைக்கு வருகிறது.

இதனைத் தொடர்ந்து, பிரபல தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா நடிக்கிறார்.

பான் இந்திய மொழிகளில் உருவாகவுள்ள இப்படத்தை பூரி ஜெகன்நாத் மற்றும் நடிகை சார்மி கவுர் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்த நிலையில், இந்தப் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளதாக நடிகை சார்மி கவுர், புகைப்படங்களை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

விஜய் தேவரகொண்டாவின் கிங்டம்: புதிய வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான கிங்டம் படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் விஜய் தேவரகொண்டா அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். கடைசியாக, ... மேலும் பார்க்க

குழந்தைகளை ஹைப்பர் ஆக்டிவ் எனக் கூறுவது வன்முறை: இயக்குநர் ராம்

குழந்தைகளை ஹைப்பர் ஆக்டிவ் எனக் கூறுவது வன்முறை என்று இயக்குநர் ராம் தெரிவித்துள்ளார்.மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி, மிதுன் ஆகியோர் நடிப்பில் இயக்குநர் ராம் இயக்கி இருக்கும் திரைப்படம் ’பறந்து ... மேலும் பார்க்க

ஒரே நாளில் வெளியாகும் பிரபாஸ், ரன்வீர் சிங் படங்கள்!

பிரபாஸின் ராஜாசாப், ரன்வீர் சிங்கின் துரந்தர் ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.ஃபீபுள் மீடியா பேக்டரி தயாரிப்பில் இயக்குநர் மாருதி இயக்கத்தில்... மேலும் பார்க்க

கட்டா குஸ்தி -2, ராட்சசன் -2 படங்களில் நடிக்கும் விஷ்ணு விஷால்!

கட்டா குஸ்தி -2, ராட்சசன் -2 படங்களில் நடிகர் விஷ்ணு விஷால் நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.தமிழின் முன்னணி நடிகரான விஷ்ணு விஷால் கட்டா குஸ்தி திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் லால் சலாம் படத்தில் நடித... மேலும் பார்க்க

சுகப்பிரசவம் குறித்து சின்ன திரை நடிகை நெகிழ்ச்சி!

சின்ன திரை நடிகை சமீரா ஷெரீஃப் தனக்கு சுகப்பிரசவம் நடந்தது குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இரண்டாவது முறையாக தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும், கருவுற்ற காலத்தில் கடந்து வந்த கடினமான சூழல... மேலும் பார்க்க

கேதார்நாத் பயண அனுபவத்தைப் பகிர்ந்த பவித்ரா ஜனனி!

சின்ன திரை நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான பவித்ரா ஜனனி கேதார்நாத்திற்கு ஆன்மிக பயணம் மேற்கொண்டார். அதன் பயண அனுபவங்களை விடியோவாக ரசிகர்களுடன் அவர் பகிர்ந்துள்ளார். அதில், கேதார்நாத் கோயிலுக்குச் ச... மேலும் பார்க்க