இருளிலும், இக்கட்டிலும் மாட்டியிருப்பது இபிஎஸ்தான்: அமைச்சா் துரைமுருகன்
சிறுபான்மையினருக்கு வழங்குவது சலுகை அல்ல; அடிப்படை உரிமை: ரிஜிஜுவுக்கு ஓவைசி பதில்
சிறுபான்மையினருக்கு அரசு வழங்குவது சலுகை அல்ல; அடிப்படை உரிமை என மஜ்லிஸ்-இ-இதெஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சித் தலைவடும் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மையினரை விட அதிக பாதுகாப்பும் சலுகைகளும் சிறுபான்மையினருக்கு வழங்கும் ஒரே நாடு இந்தியாதான் என பாஜக மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசியிருந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஓவைசி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ஓவைசி குறிப்பிட்டுள்ளதாவது,
''நீங்கள் (கிரண் ரிஜிஜு) இந்தியக் குடியரசின் அமைச்சர்; மன்னர் அல்ல. ஜனநாயகரீதியான பதவியில் நீங்கள் இருக்கிறீர்கள். சிம்மாசனத்தில் அல்ல. சிறுபான்மையினரின் உரிமை சலுகை அல்ல; அவர்களுக்கான அடிப்படை உரிமை'' எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும், இந்திய சிறுபான்மையினர் இரண்டாம்தர குடிமக்களாகக் கூட கருதப்படுவதில்லை; அவர்கள் அகதிகளாகவே நடத்தப்படுகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வக்ஃப் திருத்தச் சட்டத்தைக் குறிப்பிட்டுப் பதிவிட்டுள்ள ஓவைசி, ''ஹிந்து மத அறநிலையத் துறை வாரியங்களில் முஸ்லிம்கள் இடம்பெற முடியுமா? ஆனால், வக்ஃப் திருத்தச் சட்டத்தில் முஸ்லிம் அல்லாதவர்கள் இருக்கவும் பெரும்பான்மை பெறவும் வழிவகை செய்கிறது.
மெளலானா ஆசாத் ஃபெல்லோஷிப்பை மத்திய அரசு நிறுத்திவைத்துள்ளது. இது அனைத்தும் முஸ்லிம் மாணவர்கள் பலன் அடைகின்றனர் என்பதற்காகவே செய்யப்படுகிறது. மற்ற நாடுகளில் உள்ள மற்ற சிறுபான்மையினரை ஒப்பிட்டு நாங்கள் எதையும் கேட்கவில்லை. நாட்டில் பெரும்பான்மையினர் பெற்றுவரும் பலன்களையும் நாங்கள் கேட்கவில்லை. அரசியலமைப்பு என்ன நிர்ணயித்துள்ளதோ அதுவே எங்கள் கோரிக்கையாக உள்ளது. சமூகம், பொருளாதார மற்றும் அரசியல் நீதி கேட்கிறோம்'' எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | தலாய் லாமாவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து: சீனா கடும் அதிருப்தி!
AIMIM party leader and MP Asaduddin Owaisi has said that the government's provision of benefits to minorities is not a privilege; it is a fundamental right.