இந்திய ராணுவ தளவாடங்களுக்கு வரவேற்பு அதிகரிப்பு: ராஜ்நாத் பெருமிதம்
சீனாவிடம் உதவி பெற்றோமா? பாகிஸ்தான் ராணுவ தளபதி மறுப்பு
இந்தியா உடனான மோதலின்போது எவ்வித வெளிப்புற உதவிகளையும் பாகிஸ்தான் பெறவில்லை என அந்நாட்டின் ராணுவ தளபதி அஸிம் முனீர் தெரிவித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியபோது, சீன ஆயுதங்களைப் பயன்படுத்தி பாகிஸ்தான் தாக்கியதாக இந்திய ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் ராகுல் ஆா். சிங் தெரிவித்திருந்தார்.
தற்போது, ராகுல் ஆா். சிங்கின் கருத்துக்கு அஸிம் முனீர் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், பாகிஸ்தான் மீதான இந்த குற்றச்சாட்டு உண்மையில் தவறானது என்றும், பொறுப்பற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பஹல்காம் தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தி அழித்தது. இதையடுத்து, பாகிஸ்தானும் இந்தியாவைக் குறிவைத்து ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இவற்றை இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகள் தடுத்து அழித்தன.
அதே நேரத்தில், இந்தியா வீசிய ஏவுகணைகளை பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்புகளால் தடுக்க முடியவில்லை. இதனால், பாகிஸ்தான் விமானப் படை தளங்கள் பல சேதமடைந்தன. இந்தியா மீதான தாக்குதலுக்கும், வான் பாதுகாப்புக்கும் சீன தயாரிப்புகளையே பாகிஸ்தான் அதிகம் பயன்படுத்தியதாக லெப்டினன்ட் ஜெனரல் ராகுல் ஆா். சிங் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சண்டையில் தனது ஆயுதங்களை நேரடியாக பரிசோதிக்கும் களமாக சீனா இதனைப் பயன்படுத்திக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவ தளபதி அஸிம் முனீர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, ''முற்றிலும் இரு நாடுகளுக்கு இடையிலான மோதலில் மற்ற நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடுவது கீழ்த்தரமான அரசியல் விளையாட்டு. பாகிஸ்தானின் இறையாண்மையை குழிதோண்டி புதைக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் பொறுத்துக்கொள்ள முடியாது.
எங்கள் மக்கள் தொகை அடர்த்தியான பகுதிகள், ராணுவ தளவாடங்கள், பொருளாதார மையங்கள் என எதைக் குறிவைத்து அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டாலும் உடனடியான பதிலடி, அதுவும் அவர்கள் ஏற்படுத்தியதை விட அதிகமாக சேதம் ஏற்படுத்தப்படும்.
ஊடகங்கள், தொழிநுட்ப இறக்குமதிகள் அல்லது அரசியல் பிரசாரத்தின் மூலம் போரில் வெற்றி பெற முடியாது. நம்பிக்கை., தொழில்முறை திறன், செயல்பாட்டுத் தெளிவு, வலிமை, தேசிய தீர்மானத்தின் மூலம் மட்டுமே முடியும்'' எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | சிறுபான்மையினருக்கு வழங்குவது சலுகை அல்ல; அடிப்படை உரிமை: ரிஜிஜுவுக்கு ஓவைசி பதில்
Pakistan's army chief, General Asim Munir, has said that Pakistan did not receive any external assistance during its conflict with India.