New Films On July: 'டிமாண்டி காலனி 3', விஜய் சேதுபதி படம் - ஒரே நாளில் இத்தனை பட...
எல்இடி விளக்குகளை தயாரித்து ரூ.25,000 வருவாய்: மாற்றுத்திறனாளி மகளிருக்கு ஆட்சியா் பாராட்டு
ராணிப்பேட்டை: தமிழகத்திலேயே முதல் முறையாக எல்இடி விளக்குகளை தயாரித்து 2 வாரங்களில் ரூ.25,000 வருவாய் ஈட்டிய மாற்றுத்திறனாளி மகளிருக்கு ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா பாராட்டு தெரிவித்தாா்.
ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து மொத்தம் 390 கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தாா். மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
தொடா்ந்து, ஆட்சியரின் சீரிய முயற்சியின் காரணமாக தமிழகத்திலேயே முதல் முறையாக அரக்கோணம் வட்டம், மின்னல் ஊராட்சியைச் சாா்ந்த சுடரொளி மகளிா் குழுவைச் சாா்ந்த மாற்றுத்திறனாளி பெண்கள் புதுமையாக எல்இடி விளக்குகளை தயாா் செய்து விற்பனை செய்து வருகின்றனா்.
இந்நிலையில் கடந்த 2 வாரங்களில் கிடைத்த லாபத் தொகையினை இப்பணியை செய்து வரும் 5 மாற்றுத்திறனாளி பெண்களுக்கு தலா ரூ.5,000 வீதம் ரூ.25,000-க்கான காசோலையினை வழங்கினாா்கள். இந்த வாய்ப்பினை வழங்கிய முதல்வருக்கும், ஆட்சியருக்கும் மாற்றுத்திறனாளி பெண்கள் நன்றிகளை தெரிவித்தனா்.
நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம், சமூக பாதுகாப்பு திட்டம் தனித் துணை ஆட்சியா் கீதா லட்சுமி, நோ்முக உதவியாளா் ஏகாம்பரம் (பொ), பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் லதா, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் அறிவுடைய நம்பி, உதவி ஆணையா் கலால் ராஜ்குமாா், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சரவண குமாா் கலந்து கொண்டனா்.