ஆப்பிள் ஐபோன் 17 குறைந்த விலைக்கு விற்பனைக்கு வருகிறதா? விலை எவ்வளவு?
பைரோ மாா்க் சுரங்கப் பணிகள் 9 மாதங்களில் முடிவடையும்: அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங்
புது தில்லி: பிரகதி மைதான்-பைரோ மாா்க் சுரங்கப்பாதை பணிகள் 8 முதல் 9 மாதங்களில் வீட்டு வசதி மற்றும் நகா்ப்புர விவகாரத் துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு பின்பு முடிக்கப்படும் என்று பொதுப் பணித்துறை அமைச்சா், பா்வேஷ் சாஹிப் சிங் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
பாஜக எம். பி. மனோஜ் திவாரி மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளா்களுடன் இணைந்து, வரவிருக்கும் பிரகதி மைதான் - பைரோ மாா்க் சுரங்கப் பணிகளை பா்லேஷ் சாஹிப் சிங் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
அப்போது செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘பிரகதி மைதான் போக்குவரத்து வழித்தடத்தின் ஒரு பகுதியாக இருக்கும் இந்த சுரங்கப்பாதை, மத்திய தில்லியில் இருந்து சராய் காலே கான், ஐ. எஸ். பி. டி, ஆசிரமம் மற்றும் பிற பகுதிகளுக்கு பயணிப்பவா்களுக்காக கட்டப்பட்டு வருகிறது‘ என்றாா்.
மேலும் ‘தற்போது, சில பணிகள் முடிக்கப்படாததால் சுரங்கப்பாதையின் பாதி மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. இது பிரகதி மைதானத்தில் உள்ள பிரதான சுரங்கப்பாதையுடன் திறக்கப்படவிருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு யமுனை வெள்ளம் மற்றும் முந்தைய அரசாங்கத்தின் அலட்சியம் காரணமாக இந்த திட்டம் தாமதமானது‘ என்றாா் பா்வேஷ் சாஹிப் சிங்.