செய்திகள் :

தரமான கேமரா, சக்திவாய்ந்த புராசஸர்... ஒன்பிளஸ்ஸின் புதிய ஸ்மார்ட்போன்கள்!

post image

ஒன்பிளஸ் நார்டு 5 மற்றும் ஒன்பிளஸ் நார்டு சிஇ 5 ஆகிய இரு ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகியுள்ளன.

ஒன்பிளஸ் அறிவிப்பின்படி, இன்று (ஜூலை 8) 2 மணிக்கு இந்த ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகின. நாளை முதல் இந்த ஸ்மார்ட்போன்களை கடைகளில் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தைகளில் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.

இந்த நிறுவனத்தின் நார்டு 5 மற்றும் நார்டு சிஇ 5 ஆகிய மத்திய தர இரு ஸ்மார்ட்போன்கள் தரமான கேமரா, சக்திவாய்ந்த 8-ஆம் தலைமுறை ஸ்நாப்டிராகன் புராசஸ்ர் உடன் அறிமுகமாகியுள்ளன.

நார்டு 5சிறப்பம்சங்கள்

ஒன்பிளஸ் நார்டு 5 ஸ்மார்ட்போனில் ஸ்நாப்டிராகன் 8எஸ் 3ஆம் தலைமுறை புராசஸர் பயன்படுத்தப்படுகிறது.

6,650mAh பேட்டரி திறனுடன் 80W வேகமாக சார்ஜ் செய்யும் திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

6.83 அங்குல அமோல்ட் திரையைக் கொண்டது. 50MP பின்புற, முன்பக்க கேமரா வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

திரையின் பயன்பாட்டை சுமூகமாக்கும் வகையில் 144Hz திறன் வழங்கப்பட்டுள்ளது.

பயன்படுத்தும்போது வெப்பம் ஏற்படுவதைக் குறைக்கும் வகையில், வெப்பத் தணிப்பான்களும் உள்ளிணைக்கப்பட்டுள்ளன.

ஒன்பிளஸ் நோர்டு 5 ஸ்மார்ட்போனில் கூடுதலாக, கேம் பிரியர்களைக் கவரும் வகையில், சிபியு மற்றும் உள் நினைவகம் வழங்கப்பட்டுள்ளது.

நார்டு 5சிஇசிறப்பம்சங்கள்

நார்டு 5 சிஇ ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 8350 புராசஸர் பயன்படுத்தப்படுகிறது.

7,100mAh பேட்டரி திறனுடன் 80W வேகமாக சார்ஜ் செய்யும் திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

6.77 அங்குல அமோல்ட் திரையைக் கொண்டது. 50MP பின்புற, முன்பக்க கேமரா வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

திரையின் பயன்பாட்டை சுமூகமாக்கும் வகையில் 120Hz திறன் வழங்கப்பட்டுள்ளது.

பயன்படுத்தும்போது வெப்பம் ஏற்படுவதைக் குறைக்கும் வகையில், வெப்பத் தணிப்பான்களும் உள்ளிணைக்கப்பட்டுள்ளன.

விலை விவரங்கள்

ஒன்பிளஸ் நார்டு 5

8GB + 128 GB - ரூ. 31,999

12GB + 256 GB - ரூ. 34,999

12GB+512GB - ரூ. 37,999

ஒன்பிளஸ் நார்டு சிஇ 5

8GB + 128 GB - ரூ. 24,999

12GB + 256 GB - ரூ. 26,999

12GB+512GB - ரூ. 28,999.

கிரிடிட் கார்டு அட்டைகளைப் பயன்படுத்தினால் ரூ. 2,000 வரைக்கும் தள்ளுபடி கிடைக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Two smartphones have been launched, the OnePlus Nord 5 and the OnePlus Nord CE 5.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை 9% சரிவு!

புதுதில்லி: டாடா மோட்டார்ஸின் ஜூன் காலாண்டு மொத்த உலகளாவிய விற்பனை 9 சதவிகிதம் சரிந்து 2,99,664 யூனிட்களாக இருப்பதாக டாடா மோட்டார்ஸ் இன்று தெரிவித்தது.இந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண... மேலும் பார்க்க

ஆப்பிள் ஐபோன் 17 குறைந்த விலைக்கு விற்பனைக்கு வருகிறதா? விலை எவ்வளவு?

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடலான ஐபோன்-17 இந்தியாவில் குறைந்த விலைக்கு விற்பனைக்கு வருகிறதா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கான விடை ‘எஸ்’ என்றுதான் சொல்லியாக வேண்டும். ஐபோன் 17... மேலும் பார்க்க

ஒரே நேரத்தில் 3 போன்களுக்கு சார்ஜ் செய்யலாம்! ஷாவ்மியின் புதிய பவர் பேங்க்!

ஷாவ்மி நிறுவனம் புதிதாக பவர் பங்க் ஒன்றை ஜூலை 10ஆம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. இதில், ஒரே நேரத்தில் மூன்று ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்யலாம். இதனால், கூட்டுக் குடும்பமாக அல்லது நண்பர்களுடன் குழுவாகப் ... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் 26 காசுகள் உயர்ந்து ரூ.85.68 ஆக முடிவு!

மும்பை: உலகளவில் கச்சா எண்ணெய் விலை சரிவு மற்றும் பலவீனமான டாலரின் பின்னணியில் இன்றைய அந்நிய செலவானி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 26 காசுகள் உயர்ந்து ரூ.85.68 ஆக நிறைவடைந்தது.அந்... மேலும் பார்க்க

ஒன்பிளஸ் நோர்டு 5 விற்பனையில் தாமதம் ஏன்?

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான நோர்டு 5 நாளை (ஜூலை 9) இந்தியாவில் அறிமுகமாகிறது. இதனுடன் மற்றொரு தயாரிப்பான ஒன்பிளஸ் நோர்டு சிஇ 5 ஸ்மார்ட்போனும் அறிமுகமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்... மேலும் பார்க்க

ஏற்றம் கண்ட வங்கி பங்குகள்; சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்ந்து முடிவு!

மும்பை: வங்கி மற்றும் குறிப்பிட்ட ஐடி பங்குகள் முதலீட்டாளர்கள் வாங்கியதன் காரணமாகவும், ஆசிய சந்தைகளில் ஏற்பட்ட நேர்மறையான போக்குகளாலும் இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 270 புள்ளிகள் உயர்ந்து நிறைவடைந்... மேலும் பார்க்க