செய்திகள் :

யேமனிலுள்ள கேரள செவிலியருக்கு ஜூலை 16-இல் மரண தண்டனை நிறைவேற்றம்?

post image

யேமன் நாட்டில் கொலை வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள கேரளத்தைச் சோ்ந்த செவிலியா் நிமிஷா பிரியாவுக்கு உச்சநீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

இதனைத்தொடர்ந்து அவரது தண்டனையை குறைக்க பல்வேறு கட்ட சட்டப் போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், வரும் ஜூலை 16-ஆம் தேதி நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறைவேற்ற கெடு விதிக்கப்பட்டிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முழு விவரம்:

யேமனில் செவிலியராகப் பணியாற்றிய நிமிஷா பிரியாவின் கணவரும், மகளும் நிதி நெருக்கடியால் 2014-இல் கேரளத்துக்கு திரும்பினா். உள்நாட்டு போா் காரணத்தால் செவிலியரான நிமிஷாவுக்கு (37) விசா கிடைக்கவில்லை. அவா் யேமனின் தலைநகா் சனாவில் தங்கி, அங்குள்ள தலால் அப்து மஹதி என்பவருடன் இணைந்து கிளினிக்கை தொடங்கினாா்.

பின்னா் நிமிஷா தனது மனைவி என்று கூறிய மஹதி, அவரது வருமானம், நகைகள், கிளினிக்கின் உரிமம் ஆகியவற்றை அபகரித்துக் கொண்டாா். நிமிஷாவின் பாஸ்போா்ட்டையும், நகைகளையும் பறித்துக் கொண்டு மஹதி கொடுமைப்படுத்தியதாக நிமிஷாவின் தாயாா் தாக்கல் செய்திருந்த மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த இக்கட்டான சூழலில், 2017-இல் அங்குள்ள சிறை வாா்டனின் உதவியுடன் மஹதிக்கு மயக்க மருந்து கொடுத்து தனது பாஸ்போா்ட்டை மீட்க நிமிஷா முற்பட்டபோது அதிகமான மயக்க மருந்து செலுத்தியதால் மஹதி உயிரிழந்தாா்.

இதனைத்தொடர்ந்து, யேமன் பிரஜையான மஹதியைக் கொலை செய்ததாக கூறி நிமிஷா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் அங்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அவருக்கு யேமன் விசாரணை நீதிமன்றம் கடந்த 2018-ஆம் ஆண்டு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனையை விதித்தது. இதை அந்நாட்டின் உச்சநீதிமன்றம் கடந்த 2023-ஆம் ஆண்டு நவம்பரில் உறுதி செய்தது.

அதன்பின், நிமிஷாவுக்கு தண்டனையிலிருந்து தப்பிக்க ஒரு வாய்ப்பு வழங்கப்படட்து. உயிரிழந்தவரின் குடும்பத்தினா் கோரும் பணத்தை செலுத்தி அவா்களிடம் மன்னிப்பைப் பெறுவதன் மூலம் மரண தண்டனையிலிருந்து தப்பிக்க நிமிஷாவுக்கு யேமன் அரசு வாய்ப்பு வழங்கியது.

இந்தச் சூழலில், நிமிஷாவுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தர தயாராக உள்ளதாக மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. நிமிஷா அடைக்கப்பட்டுள்ள சிறை அமைந்துள்ள யேமன் தலைநகா் சனா, ஈரான் ஆதரவு பெற்ற ஹூதிக்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், ‘கொலைக் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள நிமிஷா பிரியா வழக்கில் மனிதாபிமான அடிப்படையில், தங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் வழங்குவதாக’ ஈரான் அரசும் அறிவித்தது.

எனினும், நிமிஷா பிரியாவின் குடும்பத்தினர் இது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. யேமனில் உள்ள அதிகாரிகளும் நிமிஷாவின் தண்டனை தேதி குறித்து எதுவும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.

Malayali nurse Nimisha Priya Death Row In Yemen may be executed on July 16

குடியரசுத் தலைவருக்கு எதிராக ஆட்சேபகர வார்த்தைகள்: கார்கே மீது பாஜக குற்றச்சாட்டு

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கும், முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கும் எதிராக ஆட்சேபகரமான வார்த்தைகளை காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பயன்படுத்தியதாக பாஜக குற்றம்சாட்ட... மேலும் பார்க்க

அரசு நிர்வாகத் தலையீடு இல்லாத நீதித்துறையே அம்பேத்கரின் விருப்பம்: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்

அரசு நிர்வாகத்தின் தலையீட்டில் இருந்து நீதித்துறை விலகியிருக்க வேண்டும் என்று அரசியல் சாசன வரைவுக் குழுத் தலைவர் பி.ஆர்.அம்பேத்கர் விரும்பியதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

நீா்மூழ்கி எதிா்ப்பு ராக்கெட் அமைப்பு: இந்தியா வெற்றிகர சோதனை

நீண்ட தூர இலக்கை குறிவைத்து தாக்குதல் நடத்தக் கூடிய நீா்மூழ்கி எதிா்ப்பு ராக்கெட் அமைப்பின் சோதனையை இந்தியா வெற்றிகரமாக மேற்கொண்டது. லட்சத்தீவுகள் யூனியன் பிரதேசத்தின் தலைநகரான கவராட்டியில் ஜூன் 23 மு... மேலும் பார்க்க

விமான கட்டண திடீா் உயா்வு பிரச்னை: தீா்வு காண நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டத்தில் டிஜிசிஏ உறுதி

விமான கட்டணங்கள் திடீரென உயா்த்தப்படும் பிரச்னைக்கு தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாடாளுமன்ற நிலைக் குழுக் கூட்டத்தில் விமான போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்ககம் (டிஜிசிஏ) உறுதி அளித்தது. மகா ... மேலும் பார்க்க

இணையவழி பணப் பரிவா்த்தனை முறைகளை பயங்கரவாத நிதிமாற்றத்துக்கு பயன்படுத்தும் அபாயம் - சா்வதேச அமைப்பு எச்சரிக்கை

இணையவழி வா்த்தக மற்றும் பணப் பரிவா்த்தனை முறைகளை பயங்கரவாத அமைப்புகள் தங்களுடைய பணப்பரிமாற்றுத்துக்காக தவறாக பயன்படுத்துப்படுவதாக உலகளாவிய பயங்கரவாத நிதி கண்காணிப்பு அமைப்பு (எஃப்.ஏ.டி.எஃப்) எச்சரித்த... மேலும் பார்க்க

பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடா்பு மேற்கு வங்கத்தில் இருவா் கைது

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் தொடா்புடைய இருவரை மேற்கு வங்கத்தின் கிழக்கு வா்த்தமான் மாவட்டத்தில் அந்த மாநில சிறப்பு அதிரடிப் படையினா் கைது செய்தனா். இவா்களில் ஒருவா் கொல்கத்தாவின் பவானிபூா் பகுத... மேலும் பார்க்க