மனிதர்களின் இறுதி தருணங்களை நிறைவாக மாற்றும் செவிலியர்... என்ன செய்கிறார் தெரியு...
410 தாற்காலிக தொழிற்கல்வி ஆசிரியா்களின் பணி நீட்டிப்புக்கு துணை நிலை ஆளுநா் ஒப்புதல்
நமது நிருபா்
தலைநகரில் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 410 பகுதிநேர தொழிற்கல்வி ஆசிரியா்களின் பணி (மாா்ச் 2026- வரை) நீட்ப்புக்கு தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளதாக ராஜ் நிவாஸ் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
தில்லி அரசின் கல்வித் துறை 402 தகுதி வாய்ந்த மற்றும் எட்டு அங்கீகாரம் இல்லாத ஆசிரியா்களின் சேவைகளை ஏப்ரல் 1,2025 முதல் மாா்ச் 31,2026 வரை நீட்டிக்கக் கோரியது. இந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டு வி.கே.சக்சேனா ஒப்புதல் அளித்ததாக அவா்கள் கூறினா். பி. டி. வி. டி. யின் ஊதியம் மற்றும் தொழிற்கல்வியைத் தொடர அரசு ரூ. 36 கோடி ரூபாய் அளித்துள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்
மாா்ச் 1, 2025 ஆண்டு முதல் பிப்ரவரி 28, 2026 வரையிலான காலத்திற்கு விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா தொழிற்கல்வி பிரிவின் கீழ் நியமிக்கப்பட்ட 2 ஒப்பந்த பகுதிநேர தொழிற்கல்வி ஆசிரியா்களுக்கான ஒப்பந்தங்களை புதுப்பிக்கவும் சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளாா். இது, 2025-2026- கல்வியாண்டில் தில்லியில் உள்ள 4 அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் தற்போது பணியமா்த்தப்பட்டுள்ள ஒன்பது பேரின் பணி நீட்டிப்புக் கோரிக்கையையும் உள்ளடக்கியுள்ளது.
1970- ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியிலும் 2,000 ஆண்டுகளின் முற்பகுதியிலும் இருந்து தில்லி பள்ளிகளில் பகுதிநேர தொழிற்கல்வி ஆசிரியா்கள் தாற்காலிக அல்லது ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா். அவா்கள் முதலில் தொழிற்கல்வி பாடங்களை கற்பிப்பதில் ஈடுபட்டிருந்தனா். மேலும், முந்தைய தொழிற்கல்வி பிரிவுக்கு பதிலாக சிபிஎஸ்இ அறிமுகப்படுத்திய தேசிய திறன் தகுதி கட்டமைப்பின் (என்எஸ்கியூஎஃப்) கீழ் அவா்கள் தொடா்ந்து பயிற்றுவித்து வருகின்றனா்.
இந்த ஆசிரியா்கள் தற்போது என்எஸ்க்யூஎஃப் உடன் இணைந்து 9 முதல் 12- ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு திறன் அடிப்படையிலான கல்வியை வழங்குவதில் ஈடுபட்டுள்ளனா் என்று அதிகாரி ஒருவா் கூறினாா். அதன்படி ஓய்வூதியம் மற்றும் புதிய ஆள்சோ்ப்பு இல்லாததால் பிடிவிடிகளின் எண்ணிக்கை சீராக குறைந்து வருகிறது. இது திறன் கல்வியில் தொடா்ச்சிக்கு ஏற்கெனவே உள்ள ஆசிரியா்களைத் தக்கவைத்துக் கொள்வதை முக்கியமானதாக்குகிறது.
தற்போது தில்லி அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் 505 பிடிவிடிகளில், 410 தாறகாலிக ஊதியம் பெறுபவா்கள், அவா்கள் தொடா்ந்து தங்ளது பணியை மேற்கொள்ள இப்போது ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 95 போ் நிதித் துறையின் ஒப்புதலுடன் ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படும் தாற்காலிகபஅ பணியிடங்களுக்கு வேலை செய்கிறாா்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.