செய்திகள் :

மனிதர்களின் இறுதி தருணங்களை நிறைவாக மாற்றும் செவிலியர்... என்ன செய்கிறார் தெரியுமா?

post image

”ஒரு மனிதன் நோயாளியாக இறப்பதற்கு முன், அவருக்கு மருந்துகள் மட்டும் போதாது.. நேசம், நம்பிக்கை, கருணை போன்ற மனித உணர்வுகளும் அவசியம்” என்று கூறுகிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த செவிலியர்

பெலிண்டா மார்க்ஸ் என்ற நர்ஸ், தனது பணியால் பலரது இறுதி தருணங்களை அர்த்தமுள்ளதாக மாற்றி வருகிறார்.

62 வயதாகும் இவர், இங்கிலாந்தில் உள்ள Sue Ryder Manorlands மருத்துவமனையில் கடந்த 40 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

இவர் அந்த மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் கடைசி தருணத்தை அவர்களின் விருப்பப்படி மாற்றியமைக்கிறார்.

பிடித்ததை, அந்த தருணத்தில் நோயாளிக்கு செய்கிறார் பெலிண்டா. தான் மரணத்தை எண்ணி பயப்படுவதில்லை என்றும் இதுபோன்று அமைதியாக இறக்கும் பலரைக் கண்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

”அந்த தருணங்களில் அவர்களின் வாழ்க்கையில் ஒரு சிறிய மாற்றமே பெரிய அர்த்தம் தருகிறது” என்கிறார் பெலிண்டா.

இறக்கும் தருணமும் மகிழ்ச்சியாக இருக்கலாம்

பெலிண்டா பணியாற்றும் மருத்துவமனையில், செல்லப்பிராணிகள் (நாய்கள், பூனைகள்) நோயாளிகளை சந்திக்க அனுமதிக்கப்படுகின்றன. சில நோயாளிகளுக்காக குதிரைகள் கூட வாசலுக்கு வருகிறதாம். திருமணம் செய்ய விரும்பும் நோயாளிகளுக்காக திருமண விழாக்களும் நடத்தப்படுகிறதாம்.

இந்த மாதிரியான சிறிய சந்தோஷங்கள், நோயாளிகளின் கடைசி நாட்களில் ஒரு நல்ல நினைவாக இருக்கும் என்று பெலிண்டா இதனை செய்கிறார்.

பெலிண்டா நன்கொடை மற்றும் நலச்சேவை குழுக்களுடன் சேர்ந்து நோயாளிகளின் இறுதி ஆசைகளை கேட்டு இவற்றையெல்லாம் செய்கிறார்.

செவிலியர் வாழ்க்கையிலும் மாற்றம்

இறப்பை மரியாதையுடன் பார்க்கும் தனது பணியின் தாக்கம், பெலிண்டாவின் வாழ்க்கையிலும் பிரதிபலிக்கிறது.

அவரும், அவருடைய கணவரும் தங்களது உயில் மற்றும் இறுதி ஏற்பாடுகளை முன்கூட்டியே திட்டமிட்டுள்ளனர்.

இறப்பு என்பது பயமூட்டும் விஷயமாக இல்லாமல், அமைதியான விடைபெறலாக மாற வேண்டும் என்பதையே பெலிண்டா மார்க்ஸ் தனது பணியால் நிரூபித்து வருகிறார்.

"நாம் உலகின் குழந்தைகள்" - குடும்பப் பின்னணியை அறிய DNA பரிசோதனை; பெண்ணுக்குக் காத்திருந்த அதிர்ச்சி

பிரான்ஸில் பிறந்து, போர்த்துகீசிய பெற்றோரால் வளர்க்கப்பட்ட கேட் என்ற பெண், சிறிய வயதிலிருந்தே தன்னைக் குடும்பத்தில் ஒரு வித்தியாசமானவராக உணர்ந்திருக்கிறார்.@juust_kate என TikTok-இல் அழைக்கப்படும் கேட்... மேலும் பார்க்க

பீகார்: நாகப்பாம்பைப் பிடிக்க முயன்ற பாம்பு பிடி வீரர் பலியான சோகம்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

பீகார் மாநிலத்தில் பிரபல பாம்பு பிடி வீரர் ஒருவர் பாம்பு கடித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார். பீகார் மாநிலத்தின் வைசாலி மாவட்டத்தில் பிரபல பாம்பு பிடி வீரராக இருப்பவர் ஜே.பி.யாதவ். பல வரு... மேலும் பார்க்க

தொடர் பாலின துன்புறுத்தல்; தாலிபன் தலைவர்களுக்கு கைது வாரண்ட்; சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்

ஆப்கானிஸ்தான் நாட்டின் பெண்கள் மற்றும் சிறுமிகளை தாலிபன்கள் துன்புறுத்துவதை எதிர்த்து நடவடிக்கை எடுத்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி), தாலிபன்களின் தலைவரான ஹிபதுல்லா அகுந்த்சாடா மற்றும் ஆப்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: "தயாராகாத சாலைக்குக் கட்டணம்" - சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய ராஜ்தாக்கரே கட்சி

மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சி சமீப காலமாகத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறது. மராத்தி பிரச்னையில் வெளிமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அடுத்த சில மாதங்களில் மாநகராட்சிக்குத் ... மேலும் பார்க்க

சீனா: அலுவலகமாக மாற்றிய நீச்சல் குளம்; தீயணைப்புத் துறையால் பின்வாங்கிய நிறுவனம்; பின்னணி என்ன?

சீனாவின் ஒரு அலங்கார நிறுவனமான லூபான் டெகோரேஷன் குழுமம் (Luban Decoration Group), தனது அலுவலகத்தை நீச்சல் குளத்தில் மாற்றியதன் காரணமாக சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.ஏற்கனவே இருந்த அலுவலகத்தைப் பு... மேலும் பார்க்க

மராத்தி விவகாரம்: `என்னிடம் கேட்காமல் பேசக்கூடாது’ - நிர்வாகிகளுக்கு ராஜ் தாக்கரே வாய்ப்பூட்டு

மகாராஷ்டிராவில் வாழும் வெளிமாநிலத்தவர்கள் கட்டாயம் மராத்தி பேசவேண்டும் என்று ராஜ் தாக்கரே கோரிக்கை விடுத்துள்ளார். மராத்தி பேசாத கடைக்காரர்களை ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தொண்டர்கள் அ... மேலும் பார்க்க