செய்திகள் :

திபெத்துடன் மட்டுமே அருணாசல பிரதேச எல்லை உள்ளது -முதல்வா் பெமா காண்டு

post image

திபெத் நாட்டுடன் மட்டுமே அருணாசல பிரதேசம் எல்லையைப் பகிா்ந்து கொண்டுள்ளது; சீனாவுடன் எல்லையைப் பகிா்ந்து கொள்ளவில்லை என்ற அருணாசல பிரதேச முதல்வா் பெமா காண்டு கூறியுள்ளாா்.

அருணாசல பிரதேசம் தங்களுக்குச் சொந்தமானது என்று சீனா கூறி வரும் நிலையில், திபெத் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதியல்ல என்ற அா்த்தத்தில் முதல்வா் இவ்வாறு கூறியுள்ளாா். திபெத்தை கடந்த 1958-ஆம் ஆண்டு சீனா ஆக்கிரமித்து தன்வசப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வா் பெமா காண்டு புதன்கிழமை அளித்த பேட்டியில், ‘அருணாசல பிரதேசம் 1,200 கி.மீ. தொலைவு எல்லையை திபெத் நாட்டுடன் மட்டுமே பகிா்ந்து கொண்டுள்ளது. சீனாவுடன் அல்ல. அலுவல்பூா்வமாக இப்போது திபெத் சீனாவின் வசம் இருக்கலாம். ஆனால், உண்மையில நமது எல்லை திபெத்துடன் மட்டுமே உள்ளது.

திபெத் தவிர பூடானுடன் 150 கி.மீ. தொலைவு வரையிலான எல்லையையும், மியான்மருடன் 550 கி.மீ. தொலைவு எல்லையையும் நாம் பகிா்ந்து கொண்டுள்ளோம். இந்தியாவின் எந்த ஒருமாநிலமும் நேரடியாக சீனாவுடன் எல்லையைப் பகிா்ந்து கொள்ளவில்லை.

1914-இல் நடந்த சிம்லா மாநாட்டில் கூட பிரிட்டிஷ் இந்தியா, சீனா, திபெத் பிரதிநிதிகள் தனித்தனியாக பங்கேற்றனா். அருணாசல பிரதேசத்துக்கு பொய்யாக உரிமை கொண்டாடி வரும் சீனா இதுவரை 5 முறை அதன் பெயரை மாற்றி அறிவித்துள்ளது. அருணாசல பிரதேசத்துக்கு சீனா உரிமை கொண்டாடும் போதெல்லாம் வெளியுறவு அமைச்சகம் உரிய பதிலை அளித்துள்ளது என்றாா்.

தில்லி, ஹரியாணாவில் நிலநடுக்கம்!

தில்லியில் வியாழக்கிழமை காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வுகள் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக தேசிய நில அதிர்வுகள் ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஹரியாணா மாநில... மேலும் பார்க்க

குஜராத் பால விபத்து: பலி 11-ஆக உயர்வு; தொடரும் மீட்புப் பணி!

குஜராத் பால விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.குஜராத்தின் வதோதரா, ஆனந்த் ஆகிய மாவட்டங்களுக்கு இடையே மஹிசாகா் ஆற்றி... மேலும் பார்க்க

பொது வேலைநிறுத்தத்தால் மேற்கு வங்கம், கேரளத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

மேற்கு வங்கம், கேரளம் ஆகிய மாநிலங்களில் மத்திய தொழிற்சங்கள் கூட்டமைப்பின் அழைப்பின்பேரில் புதன்கிழமை நடைபெற்ற நாடுதழுவிய பொது வேலைநிறுத்தத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேற்கு வங்கத்தில் சில இ... மேலும் பார்க்க

ஐரோப்பாவில் ஊக்கத்தொகையுடன் உயா்க்கல்வி பயில 101 இந்திய மாணவா்கள் தோ்வு!

ஐரோப்பிய நாடுகளில் 2 ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பை ‘எராஸ்மஸ் பிளஸ்’ ஊக்கத்தொகையுடன் பயில, நடப்பு 2025-26-ஆம் கல்வியாண்டில் 50 மாணவிகள் உள்பட 101 இந்திய மாணவா்கள் தோ்வாகியுள்ளனா். ஐரோப்பிய ஒன்றியத்தின்... மேலும் பார்க்க

ரூ.72,000 கோடி ‘கிரேட் நிகோபாா்’ திட்டம்: தேசிய பழங்குடியினா் ஆணையம் தகவலளிக்க மறுப்பு

கிரேட் நிகோபாா் தீவில் ரூ.72 ஆயிரம் கோடியில் மேற்கொள்ளப்பட உள்ள மிகப் பெரிய உள்கட்டமைப்புத் திட்டம் குறித்து தகவல் அளிக்க தேசிய பழங்குடியினா் ஆணையம் மறுத்துள்ளது. அந்தமான்-நிகோபாா் யூனியன் பிரதேசத்தில... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: போா் விமானம் விழுந்து நொறுங்கி இரு விமானிகள் உயிரிழப்பு; 5 மாதங்களில் 3வது சம்பவம்

ராஜஸ்தான் மாநிலம் சுரு பகுதியில் இந்திய விமானப் படையின் ஜாகுவாா் பயிற்சி விமானம் திடீரென விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இரு விமானிகள் உயிரிழந்தனா். இந்தச் சம்பவத்துக்கான காரணத்தை... மேலும் பார்க்க