செய்திகள் :

Doctor Vikatan: டிராகன் ஃப்ரூட்டில் என்ன ஸ்பெஷல்; யாரெல்லாம் சாப்பிடலாம்.. நன்மைகள் என்ன?

post image

Doctor Vikatan: முன்பெல்லாம் பெரிய கடைகளில், பணக்காரர்கள் வாங்கும் பழங்களில் ஒன்றாக இருந்தது டிராகன் ஃப்ரூட். இன்று அது சாலையோரக் கடைகளில், தள்ளுவண்டிக் கடைகளில் விற்பனை செய்யப்படுவதைப் பார்க்க முடிகிறது. டிராகன் ஃப்ரூட்டில் என்ன ஸ்பெஷல்... யாரெல்லாம் சாப்பிடலாம்... அதை எப்படிச் சாப்பிட வேண்டும்?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகரான ப்ரீத்தா சங்கீத்.

பொதுவாக, நம் உடலில் 'ஃப்ரீ ரேடிக்கல்ஸ்'  (Free Radicals) எனப்படும்  தீங்கு விளைவிக்கும் மூலக்கூறுகளும், அவற்றை நடுநிலையாக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் எனப்படும் மூலக்கூறுகளும் இயற்கையாகவே இருக்கும். இந்த இரண்டும் சரியான சமநிலையில் இருக்கும்போது உடல் ஆரோக்கியமாகச் செயல்படுகிறது.  உடலில் ஃப்ரீ ரேடிக்கல்ஸின் அளவு அதிகமாகி, அவற்றை நடுநிலையாக்கத் தேவையான ஆன்டிஆக்ஸிடன்ட்ஸின் அளவு குறைவாக இருக்கும்போது ஏற்படும் நிலையே  ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்.  டிராகன் ஃப்ரூட்  ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த பழம். தவிர, இதற்கு ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை  குறைத்து, நமது உடலை நோய்கள் மற்றும் முதுமையிலிருந்து பாதுகாக்கும் தன்மை உண்டு.

இந்தப் பழத்திற்கு  தனித்துவமான அழகான நிறத்தைக் கொடுப்பது பீட்டாலேயின்ஸ் (Betalains) எனப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட். இது புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தப் பழத்திலுள்ள  ஃப்ளேவனாய்ட்ஸும் (Flavonoids) நோய்கள் மற்றும் புற்றுநோய்கள் உருவாவதைத் தடுக்கும் பண்புகளைக் கொண்டுள்ளன.

டிராகன் ஃப்ரூட்டில் உள்ள கரோட்டினாய்ட்ஸ் (Carotenoids) கண் பார்வையைப் பாதுகாப்பதுடன், உடலின் செல்களை சேதத்திலிருந்து காக்கும் ஆற்றல் கொண்டவை. டிராகன் ஃப்ரூட் வைட்டமின் சி நிறைந்தது என்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும். தொற்றுநோய்கள் அண்டாமல் காக்கும்.

அதிக நார்ச்சத்து கொண்ட பழம் என்பதால் செரிமானத்தைச் சீராக்கும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரையச் செய்வதால் இதயநோய் வராமல் தடுக்கும். கலோரி குறைவான பழம் என்பதால் டயட்டில் இருப்போருக்கு ஏற்றது

டிராகன் ஃப்ரூட்டை தோல் நீக்கி அப்படியே மென்று சாப்பிடலாம்.

சருமத்தைப் பொலிவாக, இளமையாக வைத்துக்கொள்ளவும் உதவும்.  அதிக நார்ச்சத்து இருப்பதால், இது ரத்தத்தில் சர்க்கரை உறிஞ்சப்படும் வேகத்தைக் குறைத்து, ரத்தச் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் அளவோடு எடுத்துக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்படும் சில பழங்களில் டிராகன் ஃப்ரூட்டும் ஒன்று. சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு 100-150 கிராம் வரை  இந்தப் பழத்தை  எடுத்துக்கொள்ளலாம்.

டிராகன் ஃப்ரூட்டை தோல் நீக்கி அப்படியே மென்று சாப்பிடலாம். பால், தேன் சேர்த்து ஸ்மூதியாக எடுத்துக்கொள்ளலாம். பப்பாளி, மாதுளை, திராட்சை போன்ற பழங்களுடன் சேர்த்து சாலட் போல செய்து சாப்பிடலாம். தயிர், ஊறவைத்த சியா சீட்ஸுடன் சேர்த்துச் சாப்பிடலாம். மில்க் ஷேக்காக குடிக்க விரும்பினால், கொழுப்பு நீக்கப்பட்ட பால் பயன்படுத்தலாம். இனிப்பைத் தவிர்ப்பது சிறந்தது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 

Doctor Vikatan: பக்கவாதத்தில் பாதிக்கப்பட்ட வலது கை... மீண்டும் பழையநிலைக்குத் திரும்புமா?

Doctor Vikatan: என் வயது 63. எனக்கு 20 வருடங்களாக சர்க்கரைநோய் இருக்கிறது. 56 வயதில் பைபாஸ் சிகிச்சை செய்து கொண்டேன். அதற்கு ஒரு வருடத்துக்கு முன் 2 ஸ்டென்ட் வைக்கப்பட்டுள்ளது. 2023-ல் பக்கவாதம் வந்து... மேலும் பார்க்க

`இருண்டகாலம்' - இந்திராகாந்தியை விமர்சித்த சசிதரூர்.. `இவர் எந்த கட்சி?' - கொந்தளித்த காங்கிரஸ்

காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் நாடாளுமன்ற எம்.பி-யுமான சசிதரூர் சொந்த கட்சி தலைமையை தர்மசங்கடத்துக்கு ஆளாக்கும் வகையில் அவ்வப்போது கருத்துகளை தெரிவித்துவருகிறார். பிரதமர் மோடியை அடிக்கடி புக... மேலும் பார்க்க

``நீ என்ன ரெளடியா.. உன் சட்டையை கழற்றாமல் விட மாட்டேன்'' - போலீஸை மிரட்டிய கோவை திமுக நிர்வாகி

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் அரசியல் கட்சிகள் இப்போதிருந்தே பிரசாரத்தை தொடங்கிவிட்டனர். இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை மாவட்டத்தில் தேர்தல் பிரசார சுற்றுப்ப... மேலும் பார்க்க

``139 தெருநாய்களுக்குக் கருத்தடை செய்ய ரூ.20 கோடியா?'' - அதிமுக குற்றச்சாட்டுக்கு தமிழக அரசு பதில்

139 தெருநாய்களுக்குக் கருத்தடைச் செய்ய திமுக அரசு ரூ.20 கோடி ஒதுக்கியதாக அதிமுகவின் ஐ.டி விங் எக்ஸ் பக்கத்தில் பதிவு என்று பதிவிடப்பட்டது. அதிமுக ஐ.டி விங்கின் முழு பதிவு இதோ... தெரு நாய்களிடமும் ஊழல்... மேலும் பார்க்க

``ஒரு‌முறை கடலில் விழுந்தபோது காப்பாற்றினார்; மற்ற 2 முறை எப்போது?'' - மல்லை சத்யாவுக்கு வைகோ கேள்வி

கடந்த சில மாதங்களுக்கு முன் துரை வைகோவுக்கும், கட்சியின் நிர்வாகத்தில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் மல்லை சத்யாவுக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டது.மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் மூத்த தலைவர்... மேலும் பார்க்க

மதுரை: ``தடையை மீறி மேற்கு தொடர்ச்சி மலைக்கு மாட்டை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வேன்'' - சீமான்

`மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை' - நாதக மாநாடு"மாடு மேய்ப்பது அவமானம் அல்ல, வெகுமானம். திருமால், பெருமாள், கண்னன், நபிகள், இயேசு ஆகியோர் ஆடு மாடு மேய்த்தார்கள், கால்நடைகள் நம் உணர்வுடன் கலந்தவை" என்று ந... மேலும் பார்க்க